என்னோட கஷ்டமெல்லாம் வீணா போச்சு – டிமான்டி காலனி சக்ஸஸ் மீட்டில் கோப்ரா ஃபெயிலர் பற்றி பேசிய சியான்!

First Published | Aug 20, 2024, 9:17 PM IST

தங்கலான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் சியான் விக்ரம், தனது கோப்ரா படம் சரியாக ஓடாதது குறித்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், கோப்ரா படத்தில் தான் மிகவும் உழைத்திருந்த போதிலும், படம் வெற்றி பெறாததால் அது ரசிகர்களிடம் சென்றடையவில்லை என்றும் தெரிவித்தார்.

Thangalaan

சியான் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓட்டிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை எடுத்துக் கொடுக்க தனது பழங்குடி கிராம மக்களோடு புறப்படும் சியான், கடைசியில் ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தாரா? இல்லையா? என்பதை இடையில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பா ரஞ்சித்.

Thangalaan

இதற்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வந்த அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, விக்டிம், நட்சத்திரம் நகர்கிறது என்று பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். எனினும் தங்கலான் படத்திற்கு அதிக உழைப்பையும், அர்ப்பணிப்பையும் போட்டு படத்தை சரியாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

Tap to resize

Demonte Colony 2 Success Meet

அதோடு, படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பலரும் தங்களது நடிப்புத் திறமையை படத்திற்கு ஏற்றவாறு கொடுத்திருக்கின்றனர். தங்கலான் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில் கிட்டத்தட்ட ரூ.60 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த டிமான்டி காலனி ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

Demonte Colony 2

இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் சக்ஸஸ் மீட்டில் சியான் விக்ரம் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எப்போதும் வருடத்திற்கு ஒரு படம். 2 வருடம் இருப்பேன் அல்லது 3 வருடம் இருப்பேன். ஏனென்றால், நான் ஒரு கிறுக்கன் மாதிரி அதுக்குள்ளேயே, இப்படி பண்ண வேண்டும், அப்படி பண்ண வேண்டும் என்று அதிலேயே இருப்பேன்.

Cobra Movie

எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் நான் நடிச்ச கோப்ரா படம் சரியாக ஓடவில்லை. அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் நான் நடித்ததை விட வேறு எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. அந்தளவிற்கு கோப்ரா படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால், ஒரு படம் வெற்றி அடைந்திருந்தால் மட்டும் அந்தப் படமும், நடிகரின் உழைப்பும் ரசிகர்களிடம் சேரும். ஆனால், தங்கலான் படம் வெற்றியடையும் போது நான் பட்ட கஷ்டம் அவர்களுக்கு தெரிகிறது.

Chiyaan Vikram Cobra

இதைப்பற்றி எல்லோரும் பேசும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இதே போன்று தான் டிமான்டி காலனி படமும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது அருள்நிதி மற்றும் அஜய்க்கு எனது பாராட்டுக்கள். நாம் இருவரும் கோப்ராவில் சந்தித்தது இப்போது இங்கு வந்து தெரியப்படுத்துகிறேன் எனும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!