AR Rahman, Shankar Mahadevan
தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். ரோஜா படம் மூலம் மணிரத்னத்தால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய தனித்துவமான இசையாலும், பாடல்களாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், ஒரே நாள் இரவில் கம்போஸ் செய்த 3 ஹிட் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.
Varaha nadhikarai oram song
அடுத்த பாடல் வராக நதிக்கரையோரம். அப்பாடல் சங்கமம் படத்தில் இடம்பெற்று இருந்தது. இப்பாடலையும் சங்கர் மகாதேவன் தான் பாடி இருந்தார். மூன்றாவது பாடல் தனியே தன்னந்தனியே, ரிதம் படத்திற்காக இப்பாடலை கம்போஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இந்த மூன்று பாடல்களும் வேறலெவல் ஹிட்டானதோடு, இன்றளவும் பலரது பிளே லிஸ்ட்டில் இடம்பெற்று இருக்கிறது.
Thaniye thananthaniye song
அதுமட்டுமின்றி சங்கர் மகாதேவனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்ததும் இந்த பாடல்கள் தான். இப்பாடல்கள் தான் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் பாடல்கள் என்று அவரே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு இரவில் பாடல்களை கம்போஸ் செய்வது தான் மிகவும் பிடிக்குமாம். அந்த நேரத்தில் தான் அமைதியாகவும் நிம்மதியாகவும் வேலை பார்க்க முடியும் என்பதால் இன்று வரை அதை பாலோ செய்து வருகிறார். அவர் மட்டுமில்லை அனிருத்தும் இரவில் தான் இசையமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜெயிலருக்கு ஹுகும்; வேட்டையனுக்கு என்ன? ரஜினி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட அனிருத்