- Home
- Gallery
- பெண்கள் பற்றி தவறான கருத்து..மேடையில் நடிகையை தள்ளிவிட்டது.. பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர்.. இன்று ஒரு MLA..
பெண்கள் பற்றி தவறான கருத்து..மேடையில் நடிகையை தள்ளிவிட்டது.. பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர்.. இன்று ஒரு MLA..
ரசிகர்களை அறைவது, பெண்களை பற்றி தவறாக பேசுவது, நடிகையை மேடையில் தள்ளிவிட்டது என பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த நடிகர் தற்போது ஒரு எம்.எல்.ஏவாக இருக்கிறார். அவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Balakrishna
தெலுங்கு சினிமா உலகில் 60 வயதுக்கு மேலான பல நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில். நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்ற ஜாம்பவான்களின் குடும்பத்தில் பிறந்த இந்த நடிகர், பல தடைகளைத் தாண்டி, தனது சொந்த பாதையை உருவாக்கியுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில் தனது பல சர்ச்சைகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நந்தமுரி பாலகிருஷ்ணா தான்.
Balakrishna
இந்தியத் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. சர்ச்சைக்குரிய கருத்துக்கள், பெண்கள் குறித்து அவதூறான பேச்சுக்கள், ரசிகரை அறைவது போன்ற சம்பவங்களால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு நேரடி நிகழ்வின் போது ஒரு நடிகையை மேடையில் தள்ளியதற்காக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
Balakrishna
நந்தமுரி பாலகிருஷ்ணா இளம் வயதிலேயே இந்திய திரையுலகில் நுழைந்தார். பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் என்று அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவின் மகன் தான் பாலகிருஷ்ணா, சிறுவயதிலேயே சினிமாவில் தொடங்கிய அவர், தனது நடிப்பின் மூலம் விரைவில் புகழ் பெற்றார், தெலுங்கு சினிமாவில் குறிப்பிடத்தக்க நபராக ஆனார். இருப்பினும், அவரின் செயல்கள் தொடர் சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.
Balakrishna
2016-ம் ஆண்டு சாவித்ரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை பற்றி தகாத கருத்துக்களை தெரிவித்ததாக பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. "நான் ஈவ் டீசிங் வேடங்களில் நடித்தால், பெண்களைப் பின்தொடர்ந்தால், என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நான் ஹீரோயினுக்கு ஒரு முத்தம் கொடுக்கப்பட வேண்டும், அல்லது அவரை கர்ப்பமாக்க வேண்டும். அவ்வளவுதான்." என்று கூறினார்.
Balakrishna
அவரது கருத்துக்கு கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) வெளியிட்ட அறிக்கை: “பாலகிருஷ்ணா தனது கருத்துக்கு வருந்துவதாகவும், யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும், யாரையும் குறிவைத்து பேசவில்லை என்றும் தெரிவித்தது.
Balakrishna
பாலகிருஷ்ணா பலமுறை தனது ரசிகர்களை அறைந்துள்ளார். இதுதொடர்பான பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் நந்தியாலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை அறைந்தார். 2017ல், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பூமா பிரம்மானந்த ரெட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு மாலை அணிவிக்க முயன்ற ஆதரவாளர் பாலகிருஷ்ணா மீது விழுந்தார்.
Balakrishna
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா, அவரை அறைந்ததுடன் மின்விசிறியை தள்ளிவிட்டார். 2021 ஆம் ஆண்டில், தன்னை போட்டோ எடுத்த ஒரு ரசிகரை பாலகிருஷ்ணா அறைந்தார், ஆனால் அந்த ரசிகர் அதை "பொருட்படுத்தவில்லை" என்று கூறினார்.
Balakrishna
2017 இல் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது, பாலகிருஷ்ணா தனது உதவியாளரை தவறாக நடத்தும் வீடியோ வெளியானது. அதில் அவரின் தலையில் அடித்ததையும், ஷூ லேஸ்களைக் கட்டும்படியும் கூறினார். அவரின் இந்த செயல் பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அவர் மீது தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Balakrishna
சில நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணா கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளும் வீடியோ வைரலானதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அவர் தள்ளிவிட்ட போது அஞ்சலி சிரித்து அதை சமாளித்தாலும், பெண்களை முரட்டுத்தனமானகவும் அவமரியாதையாகவும் நடத்துவதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
Balakrishna
இவ்வளவு சர்ச்சைகள் இருந்தபோதிலும், பாலகிருஷ்ணா இந்திய திரையுலகில் முக்கியமான நபராக இருக்கிறார். அவர் தற்போது NBK 109 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல், ஊர்வசி ரவுடேலா, சாந்தினி சௌத்ரி, பாயல் ராஜ்புத், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார். மேலும் அவர் 2014 முதல் ஆந்திராவின் ஹிந்துப்புரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.