ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 11 படம்; தீபாவளிக்கு அதிக படங்கள் ரிலீஸ் ஆனது எந்த வருடம் தெரியுமா?

First Published | Oct 22, 2024, 12:12 PM IST

Most Diwali Release Tamil Movies : தீபாவளி பண்டிகைக்கு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம், அந்த வகையில் அப்பண்டிகை தினத்தன்று அதிக படங்கள் ரிலீஸ் ஆனது எந்த ஆண்டு என்பதை பார்க்கலாம்.

Diwali Release Movies on 1992

1992ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

1992-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்தின் பாண்டியன், கமல்ஹாசன் நடித்த தேவர்மகன், விஜயகாந்தின் காவியத் தலைவன், சத்யராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி, பிரபுவின் செந்தமிழ்ப் பாட்டு, பாக்யராஜின் ராசுக்குட்டி, சிவக்குமார் நடித்த சத்தியம் அது நிச்சயம், புதுமுகம் நடித்த மங்கள நாயகன் என மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆகியது.

Diwali Release Movies on 1989

1989ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

1989-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மாப்பிள்ளை, கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா, கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜநடை மற்றும் தர்மம் வெல்லும், சத்யராஜின் வாத்தியார் வீட்டு பிள்ளை மற்றும் திராவிடன், ராமராஜன் நடித்த தங்கமான ராசா மற்றும் அன்பு கட்டளை, ரகுமானின் புதுப்புது அர்த்தங்கள் ஆகிய 9 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின.

Tap to resize

Diwali Release Movies on 1991

1991ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

ரஜினிகாந்தின் தளபதி, கமல்ஹாசன் நடித்த குணா, கேப்டன் விஜயகாந்த்தின் மூன்றெழுத்தின் என் மூச்சிருக்கும், சத்யராஜ் நடித்த பிரம்மா, பிரபுவின் தாலாட்டு கேக்குதம்மா, பாக்யராஜ் நடித்த ருத்ரா, சிவக்குமாரின் பிள்ளைப்பாசம், ராமராஜன் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ராம்கியின் என் பொட்டுக்கு சொந்தக்காரன் ஆகிய 9 படங்கள் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... பாடல்கள் செம ஹிட்; படமும் சூப்பர் டூப்பர் ஹிட் - அப்படிப்பட்ட டாப் 8 தமிழ் படங்கள் இதோ!

Diwali Release Movies on 1986

1986ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

சிவாஜி கணேசன் நடித்த லட்சுமி வந்தாச்சு, ரஜினிகாந்தின் மாவீரன், கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன், விஜயகாந்தின் தழுவாத கைகள் மற்றும் தர்ம தேவதை, சத்யராஜ் நடித்த விடிஞ்சா கல்யாணம் மற்றும் பாலைவன ரோஜாக்கள், பிரபுவின் அறுவடை நாள், சுஜாதாவின் கண்ணுக்கு மை எழுது, பத்மினியின் ஆயிரம் கண்ணுடையாள் என மொத்தம் 10 படங்கள் 1986-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

Diwali Release Movies on 1990

1990ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

1990-ம் ஆண்டு தீபாவளிக்கு கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன், விஜயகாந்த் நடித்த சத்ரியன், சத்யாராஜின் மல்லுவேட்டி மைனர், ராமராஜன் நடித்த புதுப்பாட்டு, முரளியின் சிறையில் சில ராகங்கள், விக்ரம் நடித்த என் காதல் கண்மணி, பாக்கியராஜின் அவசர போலீஸ், நிழல்கள் ரவியின் அம்மன் கோவில் திருவிழா, புதுமுகங்கள் நடித்த அறுபது நாள் அறுபது நிமிடம், முரளியின் புதிய காற்று ஆகிய 10 படங்கள் ரிலீஸ் ஆகின.

Diwali Release Movies on 1993

1993ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள்

1993-ம் ஆண்டு தீபாவளிக்கு தான் அதிக படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதன்படி கேப்னின் எங்க முதலாளி, கார்த்திக் நடித்த சின்ன ஜமீன், சரத்குமாரின் கட்டபொம்மன், மம்முட்டி நடித்த கிளிப்பேச்சு கேட்க வா, சிவாஜியின் பாரம்பரியம், பிரபு நடித்த உழவன், மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, டி ராஜேந்தரின் சபாஷ் பாபு, ரமேஷ் அரவிந்த் நடித்த புதிய தென்றல், சரவணனின் முத்துப்பாண்டி, பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே என மொத்தம் 11 படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன.

இதையும் படியுங்கள்... 90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!

Latest Videos

click me!