'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்ததாக தன்னுடைய 62 ஆவது படத்தை பிரபல நடிகை நயன்தாராவின் காதல் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ,இப்படத்தில் அவர் ஹீரோ அல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க என்ன காரணம்? என்பது குறித்த பின்னணி வெளியாகி உள்ளது.
இதற்க்கு விக்னேஷ் சிவன், சந்தானம் நடித்தால் அந்த கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருக்கும் என தன்னுடைய விருப்பத்தைக் கூற, அஜித்தும் உற்சாகமாக அவரிடம் பேசிப் பாருங்கள் என கூறியுள்ளார். மேலும் அஜித்தே சந்தானத்திற்கு போன் செய்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் உங்களிடம் ஒரு கதை கூறுவார் அதைக் கேட்டுப் பாருங்கள் என கூறியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் சந்தானம் பணியாற்றியுள்ளார். அதேபோல் இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழ் குமாரனுடனும் பணியாற்றி உள்ளதால்... அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் படங்கள் கைவசம் இருந்தாலும், மன நிறைவோடு இந்த படத்திலும் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.