தமிழ் சினிமாவில், விஜய், விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, அவருடைய குடும்பத்தினரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, திடீரென தன்னுடைய காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
சமீபத்தில் கூட சமந்தா கதையின் நாயகியாக நடித்த 'யசோதா' படம் வெளியான போது, இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் கூட கலந்து கொள்ளாத சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே ஒரு பேட்டி மட்டுமே கொடுத்தார். மேலும் அதற்கு முன்னதாக தான் மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக கூறியது இவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரையுலகை செய்தவர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், 'சகுந்தலம்' என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த பட விழாவில் கலந்து கொள்வதற்காக சமந்தா மும்பை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வந்த போது ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் இந்த பட விழாவில், இயக்குனர் சமந்தாவை பாராட்டி பேசிய போது மிகவும் எமோஷனலான சமந்தா அங்கேயே கண்ணீர் விட்டு அழுதது பலரையும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருக வைத்தது. அதே போல் இந்த பட விழாவில் பேசிய சமந்தா, இந்த தருணத்திற்காக பல நாட்கள் காத்திருந்ததாகவும் அனைவரும் எதிர்பார்த்தபடி படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அப்படிதான் 'சகுந்தலம்' படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும், சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. என மிகவும் உருக்கமாக மன வலியுடன் சமந்தா பேசியுள்ளார். மேலும் இந்த பட விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.