பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்து சற்று, கரடு முரடாக விளையாடி வருபவர் அசீம் தான். ஆனால் இவருக்கு போட்டியாளர்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை என்றாலும், ஒவ்வொரு வாரமும் இவருக்கு அதிகப்படியான வாக்குகளை போட்டு மக்கள் காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் கமல் மற்ற போட்டியாளர்களிடம் பிக்பாஸ் டைட்டில் வெல்ல யாருக்கு தகுதி இல்லை என, நீங்கள் நினைக்கும் போட்டியாளர் யார்? என கேட்டபோது, அடுத்தடுத்து போட்டியாளர்கள் அசீம் பெயரை கூறி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதற்கான காரணத்தையும் போட்டியாளர்கள் கூறினர்.
அசீம் வெளியே நின்று பீல் செய்து கொண்டிருந்த போது, அவரை பார்த்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்க, இதற்க்கு ஏடிகே மிகவும் கூலாக போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார் என கூறி, அசீமின் ஒட்டுமொத்த பர்ஃபாம்மென்சையும் காலி செய்துள்ளார். அசீமுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருவதால், அசீம் ஃபைனல் வரை செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.