போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்ததாக நடிகர் அஜித் உடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.