சல்வார் அழகில்... சிரிப்பால் ரசிகர்களை சுழட்டி போடும் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!

First Published | Jan 9, 2023, 2:38 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர், நேவி ப்ளூ நிற சல்வாரில் புன்னகை பூத்த பூவாய்... ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
 

லேட்டாக வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினாலும், லேட்டஸ்டாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து கலக்கி வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்த இவரை, சின்னத்திரை நாயகியாக அறிமுகப்படுத்திய பெருமை விஜய் டிவி தொலைக்காட்சி தான் சேரும்.

'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்து இல்லத்தரசிகள் மனதை மட்டும் இன்றி, இளவட்ட ரசிகர்களையும் கவர்ந்த பிரியா பவானி ஷங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

நவ நாகரீக சரித்திரத்திற்கு அவள் ஆரம்ப புள்ளி..! சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' படத்தின் ட்ரைலர் வெளியானது!

Tap to resize

 இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், கனகச்சிதமாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, ஹாஸ்டல், போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டானார். இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி, ராசியான நடிகை என பெயர் எடுத்துவிட்டதால்,  தற்போது குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, இந்தியன் 2 என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ் இதோ

அவ்வப்போது ரசிகர்கள் மனதை கவரும் விதமாக சில கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது நேவி ப்ளூ நிற சல்வாரில் புன்னகை பூவாக ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட நல்ல அவற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சல்வாரில் மட்டுமின்றி, அவ்வபோது மிகவும் ஸ்டைலிஷ் ஆன உடைகள் அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதையும் ப்ரியா பவானி ஷங்கர் வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!