தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட பின்னர் தான் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது : “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்க்கும்போது விதி தன் வேலையை கரெக்டா தான் செஞ்சிருக்குனு நினைக்க தோன்றுகிறது.
நான் வடிவேலு உடன் படங்களில் நடித்தபோதெல்லாம், அவர் நன்றாக வர வேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்று தான் நடிப்போம். ஆனால் இப்போ உள்ள நடிகர்கள் எல்லாம் தான் நன்றாக வரணும் அப்படிங்குற எண்ணத்தில் தான் வடிவேலு உடன் நடித்தார்கள். அதுவே அப்படத்தின் தோல்விக்கு காரணம்.