அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம் குமார், பகவதி பெருமாள், ஜிபி முத்து, மோகன சுந்தரம், அஜய், சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, மமதி சாரி, மகாநதி சங்கர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வங்கி கொள்ளை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதுவும், வெளிநாட்டு வங்கியில் கொள்ளையடிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.