விஜய்யின் வாரிசு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?

Published : Jan 09, 2023, 09:47 AM IST

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.  

PREV
18
விஜய்யின் வாரிசு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?
காரணம் 1: தளபதி விஜய்

வாரிசு படத்தை பார்ப்பதற்கு முக்கியமான காரணம் யார் என்று கேட்டால் அது தளபதி விஜய் தான். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய வாரிசு படத்தில் விஜய் எப்படி நடித்திருக்கிறார், அவர் பேசும் வசனங்கள் எப்படி என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வமாகவும், ஆவலாகவும் இருக்கிறது.

28
காரணம் 2: இயக்குநர் வம்சி

இயக்குநர் வம்சி மற்றும் தளபதி விஜய் காம்பினேஷனில் உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் வாரிசு. குடும்பக் கதையை பின்னணிப் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீமன், ஷாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சரத்குமார், பிரபு, யோகி பாபு, சதீஷ், சங்கீதா, சம்யுக்தா, சுமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், நந்தினி ராய் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் வம்சி இதற்கு முன்னதாக மகேஷ் பாபு நடித்த மகரிஷி படத்தையும், கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படத்தையும், பிருந்தாவன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். வாரிசு படத்தையும் சேர்த்து மொத்தமாக 6 படங்களை இயக்கியுள்ளார்.

38
காரணம் 3: ராஷ்மிகா மந்தனா:

முதல் முறையாக விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் உருவாயிற்று. என்னதான் ஒரு நடிகையாக இருந்தாலும், ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிர ரசிகை. ஆதலால், அவரது ஒவ்வொரு காட்சியிலும் பார்த்து பார்த்து நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரது காட்சியிலும் ரொமாண்டிக் எப்படி இருக்கிறது, காதல் காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் இப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

48
காரணம் 4: தமன் இசை:

தமிழ் சினிமாவில் சிந்தனை செய், ஈரம், தில்லாலங்கடி, மம்பட்டியான், சேட்டை, பட்டத்து யானை, வாலு, காஞ்சனா, காஞ்சனா 2, சிவலிங்கா, ஈஸ்வரன், ஸ்கெட்ச் என்று எத்தனையோ படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவ்வளவு ஏன் விஜய் நடித்த தெறி படத்தில் ஒரு பாடலுக்கு தமன் தான் இசையமைத்திருக்கிறார். முதலில் ஒரு பாடலுக்கு இசையமைத்த தமன் தற்போது விஜய் படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடல்களும் விஜய் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலேயும், ரஞ்சிதமே, தீ தளபதி, வா தலைவா, ஜிமிக்கி பொண்ணு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

58
காரணம் 5: பிரகாஷ் ராஜ்:

கில்லி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு விஜய் - பிரகாஷ் ராஜ், ஹீரோ வில்லன் காம்பினேஷனில் வாரிசு படம் உருவாக்கப்பட்டுள்ளது. கில்லி படத்தை விட தற்போது வாரிசு படத்தில் இருவரது நடிப்பையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கில்லி படத்தில் காதலுக்காக சண்டையிடும் விஜய், இந்தப் படத்தில் தனது குடும்பத்திற்காக சண்டையிடுவார் என்று தெரிகிறது. வாரிசு இசை வெளியீட்டு விழாவிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்றெல்லாம் பிரகாஷ் ராஜ் கூறியிருந்தார். அதை வைத்து பார்க்கும் போது வாரிசு படம் மாஸாக இருக்கும் என்று தெரிகிறது.

68
காரணம் 6: பிற நடிகர், நடிகைகள்:

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக சரத்குமார், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், நந்தினி ராய், சங்கீதா, சம்யுக்தா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விஜய்யுடன் நடித்துள்ள இவர்களது காட்சியை படத்தில் காண்பதற்கு ஆவலாக இருக்கிறது.
 

78
காரணம் 7: காமெடி இருக்குமா?

படத்தில் காமெடி இருக்குமா? இருக்காதா? என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
 

88
காரணம் 8: குடும்பக் கதை

வாரிசு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அந்த டிரைலரில் மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆகையால், அவரது குடும்பம் தான் ஒட்டுமொத்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களை வில்லன் பழிவாங்குவார் என்று தோன்றுகிறது. வில்லனிடமிருந்து தனது குடும்பத்தை எப்படி விஜய் காப்பாற்றுகிறார் என்பது கூட கதையாக இருக்கலாம்? எது எப்படியோ படம் திரைக்கு வந்தால் தெரிந்துவிடும். ஆனால், முழுக்க முழுக்க குடும்பக் கதை தான்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories