கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்கிற கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.