நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் தனுஷுடன் தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம், சியான் விக்ரமுக்கு ஜோடியாக சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது மகாநடி தான். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் திறம்பட நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி.
அந்த வகையில் இவர் நடித்த பெண்குயின், குட்லக் சகி, மிஸ் இந்தியா, சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தை கொண்டு வெளியாகின.
இதையடுத்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அங்கு ராங் டே, சர்காரு வாரி பாட்டா போன்ற படங்களில் நடித்த கீர்த்தி தற்போது சிரஞ்சீவியின் போலா சங்கர், நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் இவர் கைவசம் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், ஜெயம் ரவி உடன் சைரன், கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்களின் ரகு தாத்தா போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் கீர்த்தி.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடை அணிந்து குளித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?