காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
28
இவரை அறிமுகப்படுத்தியது கன்னட சினிமாவாக இருந்தாலும், இவரை பேமஸ் ஆக்கிய பெருமை தெலுங்கு சினிமாவுக்கே உண்டு. தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேரு நீகேவாரு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
38
இதன் காரணமாக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
48
இதையடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ராஷ்மிகா. அந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறிய ராஷ்மிகாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் வாரிசு.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளார். வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளதால் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
68
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்துக்காக அவர் ரூ.4 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
78
புஷ்பா படத்துக்கு முன்பு வரை ரூ.3 சம்பளமாக வாங்கி வந்த ராஷ்மிகா, அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தன் சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
88
புஷ்பாவுக்கு பின் அவர் கமிட் ஆன முதல் படம் வாரிசு என்பதால் அதற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கியுள்ள அவர், அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். வாரிசு படம் வெற்றியடைந்தால், மேலும் சம்பளத்தை கூட்ட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.