இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாக குணசேகர் தெரிவித்தார்.