உயிர், உலக் தூங்கும் போது காதில் நயன்தாரா சொல்லும் ரகசியம் என்ன? குழந்தையை எப்படி வளர்க்கணும்?

First Published | Dec 27, 2024, 10:29 AM IST

Nayanthara tells in the ear when her Twins baby is sleeping : தனது மகன்களை இப்படித்தான் வளர்ப்பேன் என்று முன்னணி நடிகையான நயன்தாரா கூறியிருக்கிறார். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Nayanthara tells in the ear when her Twins baby is sleeping :

Nayanthara tells in the ear when her Twins baby is sleeping : சினிமாவில் காதல் திருமணம் செய்தவர்களின் பட்டியலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியும் ஒன்று. நானும் ரௌடி தான் படத்தின் மூலமாக ஆரம்பித்த காதல் இன்றும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கொண்டே இருக்கிரது. இருவருக்கும் இடையிலான புரிதல் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை காட்டுகிறது. நானும் ரௌடி தான் படம் 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் திருமணம் நடைபெற்றது. நானும் ரௌடி தான் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara and Vignesh Shivan Children

இன்று இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக வாழ்ந்து வருகிறார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதாவது, வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக தெய்விக் என் சிவன் என்று பெயரிட்டுள்ளனர். இதில், உயிர் என்பது வாழ்க்கையையும், உலக் என்பது உலகத்தையும் குறிக்கிறது.

Tap to resize

Uyir and Ulag

இப்போது அவர்கள் இருவரும் 2 வயதை கடந்துவிட்டனர். என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் கணவரையும் அன்பாக பாசமாக கவனித்துக் கொண்டு இரு குழந்தைகளையும் அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார். இவ்வளவு ஏன், ஒரு மேடை நிகழ்ச்சியில் கூட குழந்தைகளிடம் அதிக நேரம் நான் தான் செலவிடுவேன் என்று நயன்தாரா கூறியிருந்தார். அவர்களுக்கு சாபபாடு கொடுப்பதிலிருந்து எல்லா வேலைகளையும் அவர் தான் கவனித்து கொள்வாராம்.

Nayanthara Children Names

இந்த நிலையில் தான் தன்னுடைய இரு மகன்களையும் எப்படி வளர்ப்பேன் என்பது குறித்து கூறியிருக்கிறார். அதில், என்னுடைய மகன்கள் இருவரும் பணிவாக, அன்புடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் தூங்கும் போது அவர்களது காதில் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும், மற்றவர்களிடம் அக்கறையுடனும், கருணை உள்ளத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவேன். அப்போது தான் அமைதியாக இருக்கும் ஆத்மாவானது நாம் என்ன சொல்கிறோம் என்பதை உடலும் ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படும். இதைத் தான் மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Nayanthara tells in the ear when her Twins baby is sleeping

அதோடு குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது டிவி பார்ப்பதையும், அவர்களிடம் செல்போன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று ஆழமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது இவரது நடிப்பில் டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களிலும், 2 பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார்.

Nayanthara Son Names

2024 ஆம் ஆண்டில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு நயன்தாராவுக்கு சூப்பரான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நயன்தாராவிற்கு விருச்சிக ராசி என்பதால், 2025 ஆம் ஆண்டு கொஞ்சம் மந்தமான வருடமாக இருக்கும் என்று தெரிகிறது.

Latest Videos

click me!