Dhanush vs Vadivelu : தனுஷை முறைத்த வடிவேலு... 18 ஆண்டுகளுக்கு முன் படிக்காதவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?

Published : Sep 25, 2026, 09:33 PM IST

Dhanush vs Vadivelu : நடிகர் தனுஷ் உடன் வடிவேலு முதன்முறையாக இணைந்து நடிக்க இருந்த படம் படிக்காதவன். அப்போது நடந்த பிரச்சனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
தனுஷ் vs வடிவேலு

தனுஷும், வடிவேலுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்கள் என்பது தான் இன்று தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மாறநாடு கருப்பசாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய வடிவேலு, தனுஷுடன் இத்தனை ஆண்டு நடிக்காதது பற்றி பேசிய அவர் கால சூழ்நிலையால் இணைந்து நடிக்க முடியாமல் போனதாகவும் தங்களுக்குள் அது, இது என சிலர் தீப்பந்தத்தை கொளுத்தி போட்டதாக பேசி இருந்தார் வடிவேலு.

25
படிக்காதவன் பஞ்சாயத்து

இதையடுத்து தனுஷுக்கு, வடிவேலுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை என நெட்டிசன்கள் வலைவீசி தேடத் தொடங்கினர். அதில் படிக்காதவன் படத்தின் போது நடந்த பிரச்சனை தான் இவர்கள் இருவரும் இத்தனை ஆண்டுகள் இணைந்து பணியாற்றாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், படத்தில் விவேக் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் வடிவேலு. படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் ஏற்பட்ட சில சம்பவங்களைத் தொடர்ந்து அவர் படத்தில் இருந்து விலகியதாக நடிகர் மீசை ராஜேந்திரன் முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

35
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

‘படிக்காதவன்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். ஒரு காட்சியில் வடிவேலுவும் தனுஷும் நேருக்கு நேர் பேசும் வகையில் படமாக்கப்பட்டதாகவும், அந்த காட்சியில் பல டேக்குகள் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது கேமரா மற்றும் லைட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் சுராஜ் மைக்கில் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து வடிவேலுவின் கவனத்தை ஈர்த்ததாகவும், இதையடுத்து இருவருக்கும் இடையே சங்கடமான சூழல் ஏற்பட்டதாகவும் மீசை ராஜேந்திரன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

45
தனுஷ் சொன்ன வார்த்தை.. வடிவேலுவின் ரியாக்ஷன்

அடுத்தடுத்த டேக்குகளின்போதும் காட்சி எதிர்பார்த்தபடி வராத நிலையில், தனுஷ் இயக்குநர் கூறியபடி நடிக்குமாறு வடிவேலுவிடம் தெரிவித்ததாகவும் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். இதற்கு வடிவேலு தனுஷை பார்த்து முறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் ஹோட்டல் அறையில் வடிவேலு இந்த சம்பவம் குறித்து தனது உடனிருந்தவர்களிடம் பேசியதாகவும், அப்போது தனுஷை குறிப்பிட்டு சில கருத்துகளை தெரிவித்ததாகவும் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்த உரையாடலை தான் நேரடியாக கேட்கவில்லை என்றும், உடனிருந்தவர்கள் பின்னர் தன்னிடம் கூறியதாகவே தனது பேட்டியில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

D56 : முதன்முறையாக இணைந்து நடிக்கும் தனுஷ் - வடிவேலு... சுட சுட ரெடியாகும் லப்பர் பந்து இயக்குநரின் ‘படையல்’

55
அதன் பின்னர் என்ன நடந்தது?

தொடர்ந்து சுமன் உடன் இடம்பெறும் காட்சிகளும் படமாக்கப்பட இருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தொடர்பாக வடிவேலு சில ஆட்சேபனைகளை தெரிவித்ததாகவும் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய வடிவேலு, மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை என்றும் அவரது பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவேக் அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார். பின்னர் ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் நடித்த ‘அசால்ட் ஆறுமுகம்’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றது. வடிவேலுவுக்கு பதிலாக விவேக் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கான பின்னணி குறித்து மீசை ராஜேந்திரன் பகிர்ந்த இந்தப் பழைய பேட்டி தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

Vijay : அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories