நாளைக்கு விஜய் அண்ணாக்கு கெட்ட பேர் மக்கள் மத்தியில்ல வந்துட கூடாதுன்னு தான் இன்னைக்கே அத சரி செய்யுறோம். புரிஞ்சா சரி. சரியான தொட நடுங்கிய இருப்பாரு போல. முடிவு எடுக்க தெரில இவருக்கு. நம்மள முட்டாளாக, என்ன பண்ணாலும் முட்டு குடுப்பார்கள்ணு நினைச்சிட்டு இருக்காரு போல. படத்துல சரி இல்லனாலே, நல்ல இல்லனு போட்டு பொழக்குற ஒரு fans நம்ம தான். அரசியல்னா விடுவமா? ஆன இவரு என்ன நினைச்சுட்டு இப்படி பண்றாரு? எனக் கொந்தளிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ரஜினியை ஒப்பிட்டு பேசியதால் வெறுப்பான அவரது ரசிகர்கள், ‘‘உண்மை தான். விஜய், ரஜினி மாதிரி இல்ல.. ஏன்னா ரஜினி தன்னோட சுயநலனுக்காக எவனையும் கொன்றதுனது இல்ல.. ரஜினிக்கு அரசியல் வரவில்லை என பொதுவெளியில் சொல்ல தைரியம் இருந்தது. ஆனால், சொந்த கட்சி தொண்டனுக்கு கூட தெளிவாக காரணம் சொல்லாத கேவலாமனவர் விஜய்’’ எனப் போட்டு பிளக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.