சூப்பர் ஹிட் கானா பாடலுக்காக இசையமைப்பாளர் தேவா ஜெயிலுக்கு போன கதை தெரியுமா?

Published : Oct 25, 2025, 03:00 PM IST

இசையமைப்பாளர் தேவா, தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் கானா பாடல்களை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு கானா பாடலுக்காக அவர் சிறை சென்றிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Music Director Deva Song Secret

கானா பாடல்கள் என்றாலே நம் மனதுக்கு முதலில் நினைவுக்கு வருவது தேவா தான். கானா பாடல்கள் கொடுப்பதில் தேவாவை மிஞ்ச ஆளே இல்லை என சொல்லும் அளவுக்கு ஏராளமான சூப்பர் ஹிட் கானா பாடல்களை கொடுத்திருக்கிறார். அந்த பாடல்கள் எல்லாம் இன்றளவும் இளசுகளின் வைப் மெட்டீரியலாக இருந்து வருகிறது. அப்படி இசையமைப்பாளர் தேவா, தன்னுடைய இசையில் உருவான ஒரு கானா பாடலுக்கு சென்னை செண்ட்ரல் ஜெயிலுக்கே சென்றிருக்கிறார். அவர் எதற்காக சிறைக்கு சென்றார்? அந்தப் பாடல் எது? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

24
சிறைக்கு சென்ற தேவா

தேவாவை சிறைக்கு செல்ல வைத்த கானா பாடல், வேறெதுவுமில்லை, இந்து திரைப்படத்தில் இடம்பெறும் ‘வா முனிமா’ பாடல் தான். இப்படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற வா முனிமா பாடலை பாடகர் மனோ தான் பாடி இருப்பார். ஆனால். அப்பாடலை பாட, தேவாவின் மைண்டில் இருந்த பாடகர் வேறொருவர். அவர் பெயர் கானா பழனியப்பன். அவரை பாட வைக்க வேண்டும் என்று வலைவீசி தேடி வந்துள்ளார் தேவா. அப்போது தான் அவர் சிறையில் இருப்பது தேவாவுக்கு தெரியவந்திருக்கிறது. பின்னர் அவரை சந்திக்க ஜெயிலுக்கே சென்றுவிட்டாராம் தேவா.

34
கைதியை பாட வைக்க முயன்ற தேவா

அங்கு சென்று ஜெயிலரிடம் விஷயத்தை சொல்ல, அவரோ, நான் பர்மிஷன் கொடுக்க ரெடி, ஆனால் நீங்க அவரை கூட்டிட்டு போகும் போது அவர் தப்பிச் சென்றுவிட்டால் பெரிய பிரச்சனையாகிடும். அவர் ஒரு கொலைக் குற்றவாளி. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் அழைத்துச் செல்லும்போது அவர் தப்பி ஓடிவிட்டால் உங்களுக்கு தான் பிரச்சனை என ஜெயிலர் சொல்லி இருக்கிறார். இதற்கெல்லாம் ஓகே சொல்லி வந்த தேவா, ஜெயிலர் இறுதியாக போட்ட ஒரே ஒரு கண்டிஷனை ஏற்க மறுத்துவிட்டாராம்.

44
வா முனிமா பாடல் உருவானதன் பின்னணி

அது என்னவென்றால், அந்த பாடகரை அழைத்து செல்லும் போது கையில் விலங்கு மாட்டி தான் அழைத்து செல்ல வேண்டும் எனவும், அவர் பாடும் போது கூட கையில் இருக்கும் விலங்கை கழற்றக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டிருக்கிறார். ஒரு பாடகனை கையில் விலங்கு மாட்டியபடி என்னால் பாட வைக்க முடியாது என சொல்லி அங்கிருந்து கிளம்பினாராம் தேவா. இதையடுத்து தான் மனோவை அப்பாடலை பாட வைத்திருக்கிறார். அப்பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துவிட்டது. இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள், ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனக்கெட்டுள்ளாரா தேவா என வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories