மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டிடிஎஃப் வாசன் கமிட்டான படம் தான் ஐபிஎல். இப்படத்தை கருணாநிதி என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக குஷிதா நடித்துள்ளார். மேலும் கிஷோர், சிங்கம்புலி, அபிராமி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ராதா பிலிம் நிறுவனம் சார்பாக மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த டீசர் 1 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று யூடியூப்பில் வைரலாகி வருகிறது.