ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மனதை நிறைத்த படம் என்று பாராட்டி, தன்னுடைய விமர்சனத்தையும் பதிவிட்டு உள்ளார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் ஆக அமைந்த, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். மனதை நிறைத்த ஒரு படம் காந்தாரா என்றும், அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் அல்லு அர்ஜுன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என ஒன் மேன் ஷோ நடத்திய ரிஷப் ஷெட்டிக்கு அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24
அல்லு அர்ஜுனின் காந்தாரா விமர்சனம்
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : "நேற்றிரவு காந்தாரா பார்த்தேன். அருமை, என்னவொரு மனதை நிறைத்த படம் அது. எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என ஒன் மேன் ஷோ நடத்திய ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள். அனைத்து துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார். ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா ஆகியோரின் அழகியல் நடிப்பு. தொழில்நுட்ப கலைஞர்களின் அற்புதமான பணி.. குறிப்பாக அஜனீஷ் லோக்நாத்தின் இசை, அரவிந்த் எஸ் காஷ்யப்பின் ஒளிப்பதிவு, தரணி கங்கேபுத்ராவின் கலை இயக்கம், அர்ஜுனின் ஸ்டண்ட். தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் குழுவினருக்கு வாழ்த்துகள். படத்தின் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிகுந்த அன்பு, மரியாதை", என்று அல்லு அர்ஜுன் பதிவிட்டிருந்தார்.
34
காந்தாரா சாப்டர் 1 படத்தின் அடுத்த அதிரடி
அதேநேரத்தில், காந்தாரா சாப்டர் 1-ன் ஆங்கில பதிப்பு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அக்டோபர் 31-ம் தேதி ஆங்கில பதிப்பு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் விரைவில் காந்தாரா படத்தில் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது. கன்னட படங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரைக்கு வந்த காந்தாராவின் முதல் பாகம், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பின்னர் இப்படத்தின் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம், துளு பதிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், அவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டின.
இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு காந்தாரா சாப்டர் 1 பணிகளை தொடங்கிய ரிஷப் ஷெட்டி. அப்படத்தை 2 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் உருவாக்கி திரைக்கு கொண்டு வந்தார். அப்படம் உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 750 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. விரைவில் இதன் ஆங்கில பதிப்பும் ரிலீஸ் ஆக உள்ளதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலை எட்டிப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டும் நடந்தால், இந்த ஆண்டு 1000 கோடி வசூல் அள்ளிய முதல் படம் என்கிற சாதனையை காந்தாரா 1 படக்கும்.