வயநாடு நிலச்சரிவு... பெரும் தொகையை நிவாரண நிதியாக வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி

First Published | Aug 1, 2024, 2:34 PM IST

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் உதவி உள்ளனர்.

Suriya Jyothika and Karthi gives Relief fund for wayanad landslide

கேரள மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் மலைப்பிரதேசம் தான் வயநாடு. தமிழ்நாட்டுக்கு எப்படு ஊட்டி, கொடைக்கானல் உள்ளதோ, அதேபோல் கேரளாவுக்கு மலை சுற்றுலாத் தளமாக வயநாடு இருந்து வருகிறது. அங்கு அழகை கொடுத்த இயற்கை தான் இன்று அப்பகுதி மக்களை அழவும் வைத்துள்ளது. ஏனெனில் வயநாட்டில் நேற்று முன் தினம் யாரும் எதிர்பாராத விதமாக நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டு, அங்குள்ள மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

wayanad Landslide

அந்த கிராமங்களில் வசித்த மக்கள் தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். தோண்டத் தோண்ட பிணங்களாக வருவதால் வயநாடு முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. இத்தகைய இயற்கை பேரிடரால் தத்தளித்து வரும் வயநாடு மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக வந்து நிதி கொடுத்து உதவிய விக்ரம்! எவ்வளவு தெரியுமா?

Latest Videos


wayanad Landslide photos

தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் சீயான் விக்ரம் நேற்று முதல் ஆளாக ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கூட்டாக நிவாரண நிதியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்கள். மூவரும் சேர்த்து மொத்தமாக ரூ.50 லட்சம் பணத்தை நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார்கள்.

wayanad Landslide pics

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து செய்துள்ள இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுதவிர விஜய், அஜித் போன்ற பிரபலங்களும் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் விஜய்க்கு தான் கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சரியா ஒரு வருஷம் ஆகிடுச்சு! மீண்டும் வீடு தேடி சென்று.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய KPY பாலா! வீடியோ!

click me!