சினிமா நடிகைகள் என்றாலே அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள வித்யாசமான ஆடைகளை அணிவதுண்டு. ஆனால் அதில் ஒருபடி மேலே போய், இதுபோன்றெல்லாம் ஆடைகளை அணிய முடியுமா என பலரையும் தன்னுடைய வினோதமான ஆடைகளால் அசர வைக்கும் ஒரு நடிகை இருக்கிறார். அவர் தான் உர்பி ஜாவத். இவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது இவரின் வினோதமான ஆடைகள் தான்.
24
Actress urfi javed
பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற உர்பி ஜாவத், அந்நிகழ்ச்சியில் ஒரு வாரத்திலேயே எலிமினேட் ஆன பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியும் என ஆவலோடு காத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இதனால் சின்னததிரை பக்கம் சென்ற அவர், அங்கு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சீரியலில் நடித்தாலும் மாடலிங்கில் முழு கவனம் செலுத்தி வந்தார்.
ஏதேனும் விழாக்களில் உர்பி ஜாவத் கலந்துகொண்டால், அவர் அணிந்து வரும் உடையை போட்டோ எடுக்க கூட்டம் குவியும், அந்த அளவுக்கு வித்தியாசமான மற்றும் வினோதமான ஆடைகளை அணிந்து வந்து அசர வைத்து வரும் உர்பி ஜாவத் தற்போது மேலும் ஒரு விசித்திர ஆடையால் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறார்.
44
urfi javed octopus dress
அதன்படி ஆக்டோபஸ் போல உடையணிந்து வந்த உர்பி ஜாவத், ஆக்டோபஸிற்கு கால்கள் நெலிவது போல், அந்த உடையில் மோட்டார் செட் செய்து சுற்றி உள்ள கால் போன்ற அமைப்புகள் நகர்வது போன்று வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், உங்கள் திறமைக்கு நீங்கள் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. வெளிநாட்டில் இதுபோன்ற திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும், ஆனால் இங்கு கோமாளித்தனமாக தான் பார்ப்பார்கள் என்று கமெண்ட்டில் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.