பாசமிகு தங்கையின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய அஜித் குமார் - பலரும் பார்த்திடாத Rare கிளிக்ஸ்

Published : Aug 01, 2024, 12:10 PM ISTUpdated : Aug 01, 2024, 12:11 PM IST

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித்குமார், அவரின் தங்கை திருமணத்தை நடத்தி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

PREV
18
பாசமிகு தங்கையின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய அஜித் குமார் - பலரும் பார்த்திடாத Rare கிளிக்ஸ்
Ajith Sister Marriage Photos

தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி தனி ஒருவனாக வந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருப்பவர் அஜித்குமார். அவர் 1993-ம் ஆண்டு வெளிவந்த அமராவதி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் அஜித். அப்படம் அஜித்துக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

28
Ajith Sister Marriage Photos

பின்னர் பவித்ரா படத்தில் நடித்தார் அஜித். அப்படமும் அஜித்துக்கு கைகொடுக்கவில்லை. இப்படி ஆரம்ப காலகட்டத்தில் வெற்றி கிடைக்காமல் தொடர் தோல்வியை சந்தித்து வந்த அஜித், வெறுத்து சினிமாவை விட்டு விலகிவிடலாம் என முடிவெடுத்த சமயத்தில் தான் வஸந்த் இயக்கிய ஆசை திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

38
Ajith Sister Marriage Photos

அதுவும் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் சூர்யாவுக்கு தான் கிடைத்தது. அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு அஜித்துக்கு வந்து அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது. ஆசை படத்தின் வெற்றிக்கு பின்னர் காதல் மன்னன், அமர்களம் என இரு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார் அஜித்.

48
Ajith Sister Marriage Photos

இதில் அமர்களம் படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த படம் சக்சஸ் ஆனதை போல் அஜித் - ஷாலினியின் காதலும் சக்சஸ் ஆகி இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

இதையும் படியுங்கள்... 10 வயசுல பிரஷாந்த் செய்த குறும்புத்தனம்..! வீடே பத்திக்கிச்சு... ஃபயர் என்ஜினுக்கு போன் செய்த அம்மா!

58
Ajith Sister Marriage Photos

திருமணத்துக்கு பின்னர் படிப்படியாக மாஸ் படங்களில் நடிக்க தொடங்கிய அஜித், வில்லன், பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உருவெடுத்தார்.

68
Ajith Sister Marriage Photos

அஜித்தின் பேமிலியை பொறுத்தவரை அவருக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உள்ளனர். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். இதுதவிர அஜித்துக்கு தங்கை ஒருவரும் இருக்கிறார்.

78
Ajith Sister Marriage Photos

அவருக்கு மிகவும் பிடித்த அண்ணன் என்றால் அது அஜித் தானாம். அஜித்தும் தன் தங்கை மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அதனால் தன் தங்கையின் திருமணத்தை அஜித்தே முன் நின்று நடத்தி இருக்கிறார்.

88
Ajith Sister Marriage Photos

அஜித் தங்கையின் திருமணத்தில் மிர்ச்சி சிவா உள்பட சில திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... லேடி சூப்பர்ஸ்டார் மகளா இது? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பான் இந்தியா ஹீரோயின் ஆன இந்த நடிகை யார்னு தெரியுதா?

click me!

Recommended Stories