
தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையாளராக இருக்கும் தியாகராஜனின் ஒரே மகன் தான் பிரஷாந்த். மருத்துவராக வேண்டிய பிரஷாந்த், டைம் பாஸுக்காக நடித்த 'வைகாசி பொறந்தாச்சு' படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதாலும், இவரை வைத்து படம் இயக்க பலர் போட்டி போட்டதால் டாக்டர் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு ஒரேயடியாக நடிகராக மாறினார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பிரஷாந்த்... தற்போது மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. ஹிந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடித்துள்ளார். ஹிந்தியில் இப்படம் சுமார் 32 கோடிக்கு எடுக்கப்பட்டு 450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அந்தகன்' திரைப்படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பிரஷாந்த். சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்காக, கலா மாஸ்டர் எடுத்த பேட்டியில்... தன்னுடைய சிறு வயதில் செய்த குறும்பு தனத்தை கூறி, தன்னுடைய பெற்றோர் இதுவரை எதற்குமே தன்னையும், தன்னுடைய தங்கையையும் திட்டியதில்லை என கூறியுளளார்.
கலா மாஸ்டர், அப்பா - அம்மாவிடம் எதற்காவது செம்மையை திட்டு வாங்கி இருக்கீங்களா? என கேட்டதற்கு, பிரஷாந்த் "இல்ல மாஸ்டர் அப்பா - அம்மா ரெண்டு பேருமே இதுவரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் என்னையும், தங்கையையும் திட்டியதே இல்லை என கூறி சிறிய வயதில் நடந்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
பிரஷாந்துக்கு 10 வயது இருக்கும் போது... அவரின் தந்தை தியாகராஜன், வெளிநாட்டில் இருந்து ஒரு பஞ்சு மெத்தை வாங்கி வந்திருந்தாராம். அது மிகவும் அழகாக இருக்கும். அதை என் தந்தை வாங்கி வந்து சில மாதங்கள் தான் ஆனது. ஒரு நாள் நான் வாக் மேனின் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த போது வாக் மேனில் உள்ள பஞ்சு அந்த மெத்தைக்கு அடியில் சென்று விட்டது. அந்த சமயம் வீட்டில் கரண்ட் கட் ஆகி இருந்ததால், நான் மெழுகு வத்தி கொழுத்திகொண்டு கீழே விழுந்த பஞ்சியை தேட சோஃபா தீ பற்றி கொண்டது.
அதில் எறிந்த தீ நீல நிறத்தில் பார்க்க அழகாக இருந்தது எனவே அதனை ரசித்து கொண்டிருந்தேன். என் தங்கை தான், தீ பிடித்து கொண்டதை கூறினார். பின்னர் என் அம்மா வீட்டில் தீ பற்றி கொண்டது என ஃபயர் என்ஜினுக்கு போன் போட்டு விட்டார். ஆனால் சோபாவில் எறிந்த நெருப்பை வீட்டில் வேலை செய்தவர்களே அனைத்து விட்டனர்.
ஃபயர் என்ஜின் எங்கு நெருப்பு பிடித்தது என தெரியாமல், வீட்டையே சுற்றி சுற்றி வர... பின்னர் அம்மா நான் தான், ஃபோன் செய்தேன் என கூறி அவர்களை அனுப்பி வைத்தார். நான் அப்படி ஒரு குறும்பு தனம் செய்த போது கூட, அம்மா - அப்பா இருவரும், அது நெருப்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறினார்களே தவிர என்னை திட்டவில்லை என கூறியுள்ளார்.