விக்ரம் படத்துக்கு பின் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது. அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு முன்னரே அவர் கமிட்டான திரைப்படம் இந்தியன் 2. இருப்பினும் சில பிரச்சனைகளால் தாமதமாகி ஒருவழியாக கடந்த மாதம் திரைக்கு வந்தது இந்தியன் 2. இந்தியளவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இந்தியன் 2-வும் ஒன்று. அதுவும் இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டுப் வைத்திருந்தனர் ரசிகர்கள்.
24
Indian 2 Kamal
ஆனால் அவர்களின் கணக்கில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக அமைந்தது அப்படத்தின் ரிசல்ட். இந்தியன் 2 திரைப்படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது. இப்படம் சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இருந்து ஒரு வாரத்திலேயே வாஷ் அவுட் ஆன இந்தியன் 2 திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.146.58 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.
இப்படம் இந்தியாவில் 95.58 கோடியும், வெளிநாடுகளில் 51 கோடியும் வசூலித்து இருந்தது. இதுதவிர ஓடிடி உரிமையை 120 கோடிக்கு பேசி இருந்ததால் முதலுக்கு மோசமின்றி தப்பித்துவிடலாம் என தயாரிப்பு நிறுவனம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீப காலமாக படத்தின் ரிசல்டை பொறுத்தே ஓடிடி டீல் இறுதிசெய்யப்பட்டு வருகிறது. அதனால் இந்தியன் 2 படத்தின் தியேட்டர் ரிசல்ட் மோசமானதால் அதன் ஓடிடி ரிலீஸில் புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
44
Indian 2 OTT Release
இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், அப்படத்திற்கு 120 கோடி தர முடியாது என கூறிவிட்டதாம். மேலும் அதில் பாதி தொகை மட்டுமே தர முடியும் என்று டீல் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த டீல் இறுதியானால், இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இதுபோன்ற சிக்கலை சந்தித்த ரஜினியின் லால் சலாம் திரைப்படம் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.