அன்று ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்... இன்று 5 நிமிடத்தில் 2 கோடி சம்பாதிக்கிறார் - யார் அந்த நடிகை?

First Published | Aug 1, 2024, 9:05 AM IST

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வெறும் 5000 ரூபாயோடு இந்தியா வந்த பிரபல நடிகை இன்று 5 நிமிடத்தில் ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்.

nora fatehi

கனடாவை சேர்ந்தவர் நோரா பதேகி. நடிப்பின் மீது இருந்த தீராக் காதலால், கனடாவில் இருந்து இந்தியா வந்தார் நோரா. இன்று பாலிவுட் திரையுலகில் டாப் நாயகியாக கொடிகட்டிப் பறக்கும் நோரா பதேகிக்கு இந்த பெயரும், புகழும் அவ்வளவு ஈஸியாக கிடைத்துவிடவில்லை. அதை அடைவதற்கு முன் அவர் சந்தித்த தோல்விகளும், வலிகளும் ஏராளம். அப்படி நடிகை நோரா பதேகியின் வியத்தகு திரைப்பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actress nora fatehi

நடிகை நோரா பதேகி கனடாவில் இருந்து இந்தியா வந்தபோது அவரிடம் வெறும் 5 ஆயிரம் ரூபாய் தான் இருந்ததாம். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வந்த அவர் தன்னம்பிக்கையோடு, அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றார். நடிகை நோரா கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த ரோர் : டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பேன்ஸ் என்கிற பாலிவுட் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் நடித்து முடித்த கையோடு அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... சினிமாவில் வெயிட்டு பார்ட்டி இவங்கதான்... டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

Bollywood heroine nora fatehi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நோரா பதேகிக்கு அந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. 84 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி பின்னர் எலிமினேட் ஆன அவர், அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பிசியானார். அவருக்கு தெலுங்கி, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் கவர்ச்சி நடனம் ஆடி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன படம் பாகுபலி.

nora fatehi salary

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற மனோகரி பாடலில் பிரபாஸுடன் கவர்ச்சி நடனம் ஆடிய அழகிகளில் நோரா பதேகியும் ஒருவர். அப்படத்துக்கு பின்னர் கவர்ச்சி நடனம் ஆட அதிகளவில் வாய்ப்புகள் வருவதால், அதற்கேற்க தன்னுடைய சம்பளத்தையும் நிர்ணயம் செய்திருக்கிறார் நோரா. அவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வெறும் ரூ.1 கோடி தான் வாங்குகிறார். ஆனால் 5 நிமிட பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.2 கோடி வாங்கி வருகிறாராம். 

இதையும் படியுங்கள்... சம்பளமே வாங்காமல் நடித்த விஜய் சேதுபதி... ரிலீஸாகி 100 கோடி வசூல் அள்ளிய அந்த படம் பற்றி தெரியுமா?

Latest Videos

click me!