லேடி சூப்பர்ஸ்டார் மகளா இது? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பான் இந்தியா ஹீரோயின் ஆன இந்த நடிகை யார்னு தெரியுதா?

Published : Aug 01, 2024, 11:01 AM IST

லேடி சூப்பர்ஸ்டாரின் மகள் ஒருவர் இன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின் பான் இந்தியா நடிகையாக உயர்ந்துவிட்டார் அவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வைரலாகிறது.

PREV
16
லேடி சூப்பர்ஸ்டார் மகளா இது? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பான் இந்தியா ஹீரோயின் ஆன இந்த நடிகை யார்னு தெரியுதா?
janhvi kapoor

பிறக்கும் போதே சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டவர் என்றால் அது ஜான்வி கபூர் தான். இவரது பெற்றோரான போனி கபூர் - ஸ்ரீதேவி ஜோடி திருமணத்துக்கு முன்பே லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்திலேயே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. கர்ப்பமான பின்னர் தான் போனி கபூர் - ஸ்ரீதேவி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக அந்த சமயத்தில் செய்திகளும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

26
Sridevi, janhvi kapoor

80களில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். அவர் தான் அர்ஜுன் கபூர், தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக வலம் வருகிறார். ஸ்ரீதேவி உடன் தொடர்பில் இருந்ததால் தான் போனி கபூரை அவரது முதல் மனைவி விவாகரத்து செய்துவிட்டார்.

36
janhvi kapoor family

ஸ்ரீதேவி - போனி கபூர் ஜோடிக்கு இரண்டு மகள்கள், மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் பெயர் குஷி கபூர். இருவருமே சினிமாவில் நடிக்கின்றனர். அதிலும் ஜான்வி கபூர் தற்போது பான் இந்தியா நடிகையாக இருக்கிறார். சினிமாவில் அழகிய தோற்றத்துடனும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை மெருகேற்றிக் கொண்டார் ஜான்வி.

இதையும் படியுங்கள்... 120 கோடிக்கு ஒர்த் இல்ல; தியேட்டரில் அட்டர் Flop ஆன இந்தியன் 2 படத்தை அடிமட்ட விலைக்கு கேட்கும் நெட்பிளிக்ஸ்?

46
sridevi daughter janhvi kapoor

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது தேவரா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாகி உள்ளார். தேவரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி கபூர். பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடக்கிறது.

56
janhvi kapoor and boney kapoor

தெலுங்கில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளாராம் ஜான்வி கபூர். அவர் நடிக்கும் தமிழ் படம் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு மொழிகளில் பிசியாக வரும் ஜான்வியின் சம்பளமும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

66
janhvi kapoor childhood photos

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் குழந்தைப் பருவத்தில் எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. தாய் ஸ்ரீதேவி மற்றும் தந்தை போனி கபூர் உடன் ஜான்வி கபூர் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் சிறுவயதில் செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அன்று ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்... இன்று 5 நிமிடத்தில் 2 கோடி சம்பாதிக்கிறார் - யார் அந்த நடிகை?

Read more Photos on
click me!

Recommended Stories