கார்த்தி - அரவிந்த்சாமி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்!

Published : Aug 01, 2024, 12:21 PM IST

நடிகர் கார்த்தி, தன்னுடைய அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிக்கும் 'மெய்யழகன்' படத்தில் இருந்து வெளியாகி உள்ள புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
15
கார்த்தி - அரவிந்த்சாமி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

25

அந்த வகையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜப்பான்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 'வா வாத்தியாரே' என்கிற படத்திலும், '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

10 வயசுல பிரஷாந்த் செய்த குறும்புத்தனம்..! வீடே பத்திக்கிச்சு... ஃபயர் என்ஜினுக்கு போன் செய்த அம்மா!

35

'விருமன்' படத்திற்கு பின்னர் நடிகர், சூர்யா தன்னுடைய தம்பி கார்த்தியை வைத்து... 2டி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் 'மெய்யழகன்' படம் குறித்த தகவல்கள் அவ்வபோது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. கார்த்தி நடிக்கும் அவரின் 27 ஆவது திரைப்படமான மெய்யழகன் படத்தில், கார்த்திவுடன் சேர்ந்து பிரபல நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார்.

45

 ஏற்கனவே அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இருவரும் இடம்பெற்ற போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோயிலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதே போல் அரவிந்த்சாமி சைக்கில் ஓட்ட கார்த்தி பின்னால் அமர்ந்து செல்வதும் செல்வது போல் இருந்தது.

அன்று ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்... இன்று 5 நிமிடத்தில் 2 கோடி சம்பாதிக்கிறார் - யார் அந்த நடிகை?

55

பருத்தி வீரனுக்கு பின்னர் படு லோக்கலாக... அதுவும் கிராமத்து வேடத்தில் கார்த்தி இறங்கி நடித்துள்ள இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஸ்வாதி நடிக்க, நடிக்க ஸ்ரீ வித்யாவும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories