போதை பொருள் வழக்கில் சிக்கியதால் விஜய் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டாரா அனன்யா பாண்டே?

First Published | Oct 22, 2021, 5:06 PM IST

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா (Ananya Pandey) பாண்டேவிடம் போதை பொருள் வழக்கு தொடர்பாக நேற்று NCB விசாரணை செய்த நிலையில், தற்போது அனன்யா பாண்டே தளபதி விஜய் (vijay movie) படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதை பொருள் வழக்கில் (Drug Case) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், நேற்று பாலிவுட் திரையுலகின் இளம் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிரடி சோதனை செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை NCB அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அனன்யா பாண்டே தன்னுடைய பெற்றோருடன் மும்பையில் வசித்து வரும் பாந்த்ரா வீட்டில் தான் நேற்று காலை திடீர் என NCB அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Tap to resize

இந்த சோதனையின் போது NCB அதிகாரிகள் அனன்யா பாண்டேவின் மொபைல் போன் மற்றும் லேப் டாப் போன்றவற்றை சோதனை செய்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் நடிகை அனன்யா பாண்டேவை  NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து அனன்யா பாண்டேயை NCB அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக, தன்னுடைய தந்தையுடன் விசாரணைக்கு வந்தார். இவர் ஆர்யன் கானுடன் செய்த வாட்ஸ் ஆப் உரையாடல்களை வைத்தே துருவி துருவி விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த போதை வழக்கு விசாரணை அனன்யா பாண்டேவின் சினிமா கேரியரையும் பாதித்து விட்டது. தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ள 66 ஆவது படத்தில் அனன்யா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த போதை மருந்து வழக்கில் இவர் சிக்கியுள்ளதால் இவரை, இந்த படத்தில் இருந்து நீக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!