'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரோஷ்னி..? தீயாக பரவும் காரணம்..!

First Published | Oct 22, 2021, 3:13 PM IST

விஜய் டிவி (Vijay TV) தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' (Bharathi Kannama) சீரியலில் இருந்து கதாநாயகியாக நடித்து வரும் ரோஷ்னி (Roshni) விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tap to resize

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் டார்க் ஏஞ்சல் ரோஷ்னி. ஆரம்பம் முதலே இவரது நடிப்பு, கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடிப்பது போன்றவை இவரை அதிகம் கவனிக்க வைத்தது.

இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்து வந்த அகிலன், பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்த சீரியலில் நாயகி ரோஷ்னியும் சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக சீரியல் நடிகைகளை ஹீரோயினாக நடிக்க வைப்பதில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக கவனம் காட்டுகிறார்கள்.

அந்தவகையில் இதுவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்து சென்று ப்ரியா பவானி ஷங்கர் ம் வாணி போஜன் போன்றவர்கள் முன்னணி இடத்தை பிடித்துள்ள நிலையில் ரோஷ்னிக்கும்  தற்போது பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, சீரியலில் இருந்து விலகி திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து இவர் விலக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Latest Videos

click me!