பட்டு சேலை மீது பக்கா ஸ்டைலிஷான தங்க நிற கோட்... வித்தியாசமான அவுட் ஃபிட்டில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்..!

First Published | Oct 22, 2021, 12:57 PM IST

அவ்வப்போது வித்தியாசமான அவுட் ஃபிட்டில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)  சேலை மீது கோட் அணைந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

Tap to resize

பழைய அழகில் இருந்து சற்று குறைந்தாலும், தற்போது இவர் எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கிறார் என, ரசிகர்கள் கமெண்ட் மூலம் இவரது மனதை குளிர வைத்து வருகிறார்கள்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைக்கிறார்.

ஏதாவது தாறுமாறான அழகில் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் இவரை... ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது கோல்டன் குயினாக மாறி கீர்த்தி சுரேஷ் தற்போது தங்க நிற பட்டு சேலையில் ரசிகர்களை பாடாய் படுத்தும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதிலும் சேலையில் மீது, கீர்த்தி சுரேஷ் சேலைக்கு மேட்சிங்கான கோட் அணிந்து போஸ் கொடுத்திருப்பது வேற லெவல் அழகு என்று தான் கூறவேண்டும். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகிறது.

Latest Videos

click me!