விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? மத்திய அரசின் ஆய்வு குழு வெளியிட்ட பரபரப்பு விளக்கம்..!

First Published | Oct 22, 2021, 11:42 AM IST

நடிகர் விவேக் (Vivek) கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு (Heart Attack) காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் கொரோனா (Covid 19 vaccine) விழிப்புணர்வு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். எனவே இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சிலர் வதந்தியை கிளப்பிய நிலையில். தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு தற்போது இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

Tap to resize

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  அவரது இதய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

vivek actor

இவரது மரணத்திற்கு காரணம் தடுப்பூசி இல்லை என்று, இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் விளக்கம் கொடுத்தும், தொடர்ந்து சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கின் மரண சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்த மத்திய அரசின் ஆய்வு குழு, நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.

Latest Videos

click me!