பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.