கண்ட இடத்தில் கணவர் நினைவாக சமந்தா குத்திக்கொண்டு டாட்டூ... சீக்ரெட்டை வெளிப்படுத்தும் வைரல் போட்டோஸ்..!

First Published | Oct 22, 2021, 1:47 PM IST

நடிகை சமந்தா உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விட்டு பிரிந்த நிலையில், தற்போது அவரது நினைவாக இவர் குத்திக்கொண்ட  டாட்டூ புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.

சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி ஆச்சர்யப்படுத்தியவர். ஆனால் யார் கண் பட்டதோ திடீர் என இவருக்கும் நாக சைதன்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு விவாகரத்து வரை சென்றுவிட்டது.

Tap to resize

இதற்கான உண்மையான  காரணம் இதுவரை வெளியே வராவிட்டாலும், சமந்தாவை குறை கூறும் விதமாகவே பல்வேறு வதந்திகள் பரவியது. சமந்தா சுயநலவாதி, கர்ப்பத்தை கலைத்தார், குழந்தை பெற்று தர மறுத்தார், வேறு ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்தார் என்பது போல் சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட அதுகும் நெருப்பாக எரிந்தது.

இதுபோன்ற வதந்திகளுக்கு சமந்தா விளக்கம் கொடுத்த போதிலும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே மனஉளைச்சலில் இருந்து வெளியே வர தன்னுடைய நண்பர்கள் மற்றும் நாய் குட்டிகளுடன் நேரம் கழித்து வருகிறார்.

சமந்தா தன்னுடைய காதல் கணவர் நினைவாக தன்னுடைய உடலில் 3 இடங்களில் டாட்டூ குத்திகொண்டுள்ளார். இவை அனைத்திற்கும் தனி தனி அர்த்தங்களும் உண்டு.

சமந்தா முதுகில் ஒரு அழகான பச்சை குத்தியுள்ளார். அது அவரது தோள்களுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. 'ymc' என்ற மூன்று எழுத்து தான் அந்த டாட்டூ. (YMC) என்பது எதனை குறிக்கிறது என்றால் 'Ye Maaya Chesave'. இது 2010 இல், மேனன் இயக்கிய முதல் படம். இந்த படத்தில் சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யாவும் சேர்ந்து நடித்திருந்தனர்.

மணிக்கட்டு பச்சை: இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் அவருடைய கணவர் பச்சை குத்தியுள்ளார். இவை வைக்கிங் சின்னங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த சின்னத்தின் அர்த்தம் என்பது, உங்களுக்கான சொந்த வாழ்க்கையை உருவாக்குங்கள் என்பது தான். இதனை ஒரு தொலைக்காட்சியில் கூட சமந்தா தெரிவித்துள்ளார்.  
 

இதை தொடர்ந்து, சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய  முதுகு பகுதியில் குத்தியுள்ளார். இது அவருடைய கணவரின் பெயர் தான். பல டாட்டூ குதி இருந்தாலும் இதுதான் அவருக்கு மிகவும் பிடித்ததாம்.
 

தற்போது நாகசைதன்யாவை சமந்தா பிரிந்து விட்ட நிலையில், இந்த டாட்டூக்களை நீக்குவாரா? என சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வந்தாலும் சமனதா என்ன முடிவு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Videos

click me!