'குக் வித் கோமாளி'-யை முடித்த கையோடு 'பிக்பாஸ்' வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

First Published | Sep 24, 2024, 1:07 PM IST

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர், பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 

Vijay Sethupathy

விஜய் டிவியில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களை, வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமலஹாசன், 8-ஆவது சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த தகவல் ஆண்டவரின் ரசிகர்களுக்கு, சிறு மன கஷ்டத்தை ஏற்படுத்து இருந்தாலும்... விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார்? என்கிற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
 

Kamalhaasan

தற்போது பிக்பாஸ் வீட்டின் கட்டுமான பணிகள் துரிதமாக வேளச்சேரி பகுதியில் நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய பிரபல நடிகர், போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவியின் தோழி கெனிஷா செய்வது தடை செய்யப்பட்ட ஹீலிங் சிகிச்சை; வெளியாகி இருக்கும் தகவல்கள்!!


Biggboss Season 8

பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் 13ஆம் தேதி துவங்கும் என்று முன்னர் கூறப்பட்ட நிலையில்... தற்போது வெளியாகி உள்ள தகவலில், அக்டோபர் 6-ஆம் தேதியே பிக்பாஸ் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ற போல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியும், இறுதி கட்டத்தை எட்டவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது,

VTV Ganesh

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் தீபக், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத், காமெடி நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ரஞ்சித், தொகுப்பாளர் ஜெகன், செல்லமா சீரியல் நடிகை அன்ஷிதா, நடிகை பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா, மகாராஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சிதா, உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இந்த லிஸ்டில் தற்போது பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷின் பெயரும் தற்போது அடிபடுகிறது. குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாராம். எனவே கண்டிப்பாக... இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பாவம் பார்த்த என் தாய் வாழ்க்கையை பங்கு போட்டவர் சாவித்திரி! வீட்டுக்குள் வந்தது எப்படி? ஜெமினி மகள் பளீச்!

Latest Videos

click me!