
சினிமா நடிகைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது உண்டு. அப்படி கோலிவுட்டில் சில முன்னணி நாயகிகள் விதவிதமாக டாட்டூ போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி கோலிவுட் ஹீரோயின்ஸ் குத்திய டாட்டூஸ் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் சீக்ரெட்ஸ் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை சமந்தாவுக்கு டாட்டூ என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் உடலில் பல இடங்களில் அவர் டாட்டூ குத்தி இருந்தார். அதில் நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கும் போது அவரது பெயரை இடுப்பு பகுதியில் குத்தி இருந்தார் சமந்தா, பின்னாளில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து அந்த டாட்டூவை நீக்கிவிட்டார் சமந்தா.
நடிகை திரிஷா தன் உடலில் மூன்று இடங்களில் டாட்டூ குத்தி இருக்கிறார். அதில் ஒன்று அவர் தன்னுடைய ராசிக்கான அடையாளத்தை கையில் குத்தி இருக்கிறார். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான நீமோ மீனை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். இறுதியாக சினிமா மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தன் முதுகில் கேமராவை டாட்டூவாக குத்தி இருக்கிறார் திரிஷா.
நடிகை நயன்தாராவும் டாட்டூ பிரியை தான். இவர் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரது பெயரை தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். பின்னர் பிரபுதேவா உடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை பிரேக் அப் செய்து பிரிந்த நயன்தாரா பிரபுதேவா என்று இருந்ததை பாசிடிவிட்டி என மாற்றி டாட்டூவாக குத்திக் கொண்டார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக தன் முதுகில் தமிழ் கடவுள் முருகனின் வேல் டிசனை டாட்டூ குத்தி உள்ளதோடு ஷ்ருதி என தமிழில் பெயரையும் எழுதி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... MGR-க்கு எழுதிய பாடல் வரியை விஷால் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்த வாலி - அது என்ன பாட்டு தெரியுமா?
நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா தன்னுடைய மார்பு பகுதியில் ஒரு பெரிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். அதேபோல் பான் இந்தியாவின் செம்ம பிசியான நடிகையாக உலா வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன் கையில் irreplaceable என்கிற வார்த்தையை டாட்டுவாக குத்தி இருக்கிறார். அதேபோல் அனுபமா பரமேஷ்வரன் தன் நெஞ்சில் குட்டியான டாட்டூ போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடித்துள்ளார்.
பருத்திவீரன் படத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகை பிரியாமணி. இவர் தன்னுடைய கையில் daddy girl என டாட்டூ குத்தி இருக்கிறார். தந்தை மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு டாட்டூ குத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாசக்கார புள்ள என பிரியாமணியை பாராட்டி வருகின்றனர்.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் தன்னுடைய முதுகில் ரங்கோலி போல் மிகப்பெரிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். முதலில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த அமலா பால், கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு டாட்டூ என்றால் மிகவும் இஷ்டமாம். இதனால் அவர் தன்னுடைய முதுகில் பெரிய டிராகன் டாட்டூ ஒன்றை போட்டிருக்கிறார். இதையடுத்து சினிமா மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக கையில் இரண்டு முகமூடிகள் கொண்ட டாட்டூவை குத்தி உள்ளார். இதுதவிர கையில் பெமினைன் சிம்பலையும் டாட்டூவாக குத்தி இருக்கிறார்.
90ஸில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கும் டாட்டூ மீது அலாதி பிரியம். அதனால் பல இடங்களில் டாட்டூ குத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கையில் தன் செல்ல மகள்களான அனந்திதா, அவந்திகா ஆகியோரின் பெயர்களை டாட்டூவாக குத்தி உள்ளார் குஷ்பு.
இதையும் படியுங்கள்... மணிமேகலை இப்படி பண்ணிருக்க கூடாது; பிரியங்கா போன் போட்டு அழுகுறா! CWC பஞ்சாயத்தில் இறங்கிய வனிதா