இப்படி நாம் அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது... உடல் உந்து சக்தியை இழந்து விட நேர்கிறது. அதாவது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். அதே நேரம் நம் உடலில் ஏதேனும் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்க்கு உகந்த மருந்துகள்... மருத்துவ ஆலோசனையோடு எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆனால் இதுபோன்ற மருந்துகளே இல்லாமல்... மனிதனில் உடலில் உள்ள உந்து சக்தியை அதிகரித்து சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான், ஹீலிங் சிகிச்சை முறை.
இந்த ஹீலிங் சிகிச்சை முறை, சவாலான சூழ்நிலைகளில் நிதானமாக யோசிக்க, அதை கடந்து செல்ல உதவும்.
பயம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
குழப்பமான மனநிலையை நீக்குகிறது.
வரம்புகள் மற்றும் தடைகளை கடக்க உதவுகிறது.
உங்களை பற்றிய சுய விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
உங்கள் ஆன்மாவையும் ஆவியையும் இணைக்க உதவுகிறது.
உங்கள் திறனைக் கண்டறிந்து வாழ உதவுகிறது.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதன் மூலம் விரும்பத்தகாத உணர்ச்சிகளைக் குறைக்கிறது.
உடல் கோளாறுகளின் காரணத்தைப் மன உளைச்சல் இன்றி புரிந்துகொள்ள உதவுகிறது.
இது போன்ற சிகிச்சை, மன ரீதியாக மட்டுமே நல்ல பலன் அளிக்க கூடியதாக உள்ளது. அதே சமயம் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டியது கட்டாயமானது.
ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!