மணிமேகலை இப்படி பண்ணிருக்க கூடாது; பிரியங்கா போன் போட்டு அழுகுறா! CWC பஞ்சாயத்தில் இறங்கிய வனிதா

Published : Sep 24, 2024, 09:08 AM IST

Vanitha about Cook With Comali Issue : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சண்டைபோட்ட மணிமேகலை மற்றும் பிரியங்கா குறித்து நடிகை வனிதா விஜயகுமார் முதன்முறையாக பேசி இருக்கிறார்.

PREV
15
மணிமேகலை இப்படி பண்ணிருக்க கூடாது; பிரியங்கா போன் போட்டு அழுகுறா! CWC பஞ்சாயத்தில் இறங்கிய வனிதா
Vanitha about Cook With Comali Issue

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் அதில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய மணிமேகலை, பிரியங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அதுபற்றி வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

25
Manimegalai vs Priyanka Deshpande

அவர் பேசியதாவது : “அனைவருக்குமே சுய மரியாதை ரொம்ப முக்கியம். நமக்கு எங்கு மரியாதை இருக்கிறதோ அங்கு நாம் இருக்கலாம். மரியாதை இல்லாத இடத்தில் இருக்ககூடாது. அதே சமயத்தில் இந்த விஷயத்தை ஊதி ரொம்ப பெருசாக்கி தேவையில்லாம பிரச்சனை ஆக்கிட்டாங்க. பிரியங்கா, மணிமேகலை இருவருடனும் நான் வேலை பார்த்திருக்கிறேன். மணிமேகலையை குக் வித் கோமாளி முதல் சீசனில் இருந்து எனக்கு தெரியும்.

மணிமேகலை ஒரு தைரியமான பொண்ணு, எதைபற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டாங்க. புருஷனையே வாடா போடானு தான் பேசுவா. அவளுடையது அடாவடி கேரக்டர். பர்சனலா எனக்கு பிரியங்காவை ரொம்ப பிடிக்கும். பேசுவதிலும் பழகுவதிலும் நல்ல பொண்ணு. நம்ம திட்டினால் கூட வாங்கிக்கிற ஒரு கேரக்டர் அவ. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்குகளும், கோமாளிகளும் சண்டை போடுவது நார்மலான விஷயம் தான்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் கூட்டமில்லை... ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட கோட் திரைப்படம் - எப்போ ரிலீஸ்?

35
Anchor Priyanka

ஒருவரை ஒருவர் கம்பேர் பண்ணி பேசுனா அது ரொம்ப தப்பு. ஆனா நான் தான் பேசனும் நீங்க பேசக்கூடாது என சொல்வது தப்பான விஷயம். அங்க என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும். இந்த விஷயத்தை மீடியா தான் ரொம்ப பெருசு பண்ணிடுச்சு. நிறைய பேர் தேவையில்லாம உள்ள வந்து பேசிருக்காங்க. மணிமேகலை கணவரோடு வாழ்கிறார் அதனால் அவருக்கு சுயமரியாதை இருக்கு, பிரியங்காவின் கணவர் அவரை விட்டுச் சென்றுவிட்டதால் அவருக்கு சுயமரியாதை இல்லை என பேசுபவர்களை செருப்பால இல்ல எதவேணா வச்சு அடிக்கலாம்.

45
cook with comali Manimegalai

ஒரு விவாகரத்து பெற்று பிரிவதற்கும் அவர்களுடைய கேரக்டருக்கும் சம்பந்தம் இல்லை. பிரியங்காவின் கேரக்டரை தவறாக பேசுறாங்க. அதைப்பார்த்து அதற்காக மணிமேகலை வீடியோ போடுறாங்க. அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான், மணி, நீ வளர்ந்து வர்ற பொண்ணு, உன்னுடைய லைஃப் நல்லா இருக்கிறது என்பதற்காக, இன்னொருத்தர் லைப் டேமேஜ் செய்யப்படுவதை நீ ஊக்குவிக்காதே. சொம்பெல்லாம் தூக்கி எறிவதெல்லாம் பார்ப்பதற்கு நல்லா இல்ல. 

55
Vanitha vijayakumar

பிரியங்கா என்னிடம் பேசினார். அவர் நம் நாட்டிலேயே இல்லை. இதை சிலர் அவர் ஓடிப்போய் விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். நானும் குக் வித் கோமாளி, பிக்பாஸ் முடிஞ்சதும் வெளிநாட்டுக்கு தான் சென்றேன். இங்க சுதந்திரம் இருக்காது. அதனால் தான் முன்கூட்டியே பிளான் பண்ணி பிரியங்கா வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். அவரிடம் போன் பேசும்போது ரொம்ப அழுதாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒரு பெண்ணுக்கு பெண்ணோட வலி தெரியவில்லை என்றால் அவர் பொண்ணா இருந்து பிரயோஜனமே கிடையாது என வனிதா கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!

Read more Photos on
click me!

Recommended Stories