The Greatest of All Time
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் கோட். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. கோட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆனது. கோட் படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளையும் கோட் திரைப்படம் ஆக்கிரமித்து இருந்தது.
GOAT Movie
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் மகன் விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கி இருந்தனர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மைக் மோகன், ஜெயராம், கனிகா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
Venkat Prabhu, Vijay
இதுதவிர த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய கோட் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களாக வசூல் வேட்டை நடத்தியது. அப்படம் இதுவரை உலகளவில் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது கோட்.
இதையும் படியுங்கள்... லோகேஷின் LCU.. யூனிவெர்சில் இணையும் "SKவின் நாயகி?" - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
GOAT Movie Box Office
2 வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்த கோட் திரைப்படத்தை கடந்த வாரம் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் ஓரங்கட்டி உள்ளது. லப்பர் பந்து படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கோட் படத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கோட் படத்துக்கு கூட்டமில்லாததால் அதற்கு பதிலாக லப்பர் பந்து திரைப்படம் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
GOAT movie OTT Release Date
இந்த நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கோட் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், ஓடிடியில் கோட் திரைப்படம் டைரக்டர்ஸ் கட் ஆக ரிலீஸ் ஆக உள்ளது. அதன் மொத்த ரன்னிங் டைம் 3 மணிநேரம் 40 நிமிடம் இருக்குமாம். தியேட்டரில் இடம்பெறாத சீன்கள் ஓடிடியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8 தமிழ்.. போட்டியாளராக களமிறங்குகிறாரா அந்த கிளாசிக் காமெடியன்? தீயாய் பரவும் நியூஸ்!