அதே சமயம் பாலிவுட் உலகில் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கத்தில், "கர்ணா" என்ற படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். இதிகாச கதையான அதில், கர்ணனுடைய கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடிப்பார் என்றும், பிரபல நடிகை ஜான்வி கபூர் அதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என்றும் தகவல் வெளியானது.
மேலும் இந்த திரைப்படத்திற்காக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்பொழுது அந்த திரைப்படத்திலிருந்து சூர்யா விலகி உள்ளதாகவும், அந்த திரைப்படமும் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கல்கி திரைப்படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு கதையில் தான் நடிப்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது என்று சூர்யா நினைத்ததாகவும், அதனால் தான் அந்த திரைப்படத்திலிருந்து அவர் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.