ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!

First Published Sep 23, 2024, 9:05 PM IST

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஐம்பூதங்களை மையமாக வைத்து ஒரே படத்தில் உருவான 5 பாடல்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
 

AR Rahman Composed Songs

இயக்குனர் 'வசந்த்' இயக்கத்தில், 2000-ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் ரிதம். இந்த படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்க, மீனா, ஜோதிகா, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இவர்களுடன் ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 

Rhythm Movie

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, பிரமிட் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனாலும் கூட, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் பாடல்களாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே, நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு, என ஐம்பூதங்களை மையப்படுத்தி  எழுதப்பட்டிருந்தது.

பாவம் பார்த்த என் தாய் வாழ்க்கையை பங்கு போட்டவர் சாவித்திரி! வீட்டுக்குள் வந்தது எப்படி? ஜெமினி மகள் பளீச்!

Latest Videos


5 Elements Used in Songs

குறிப்பாக 'நதியே நதியே... பாடல் நீரை மையமாக வைத்து, எழுதப்பட்ட பாடலாகும். இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில், உன்னி மேனன் பாடி இருப்பார். அதை போல் 'காற்றே என் வாசல் வந்தாய்' என தொடங்கும் பாடல் காற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த பாடலை கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்தனர். 'தனியே தன்னந்தனியே' பாடல் நிலத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாகும்.  இதனை சங்கர் மகாதேவன் பாடியிருப்பார். மேலும் இந்த பாடலில் கேமியோ ரோலிலும் வந்து ஆட்டம் போட்டிருப்பார் சங்கர் மகாதேவன்.

AR Rahman Songs

'அன்பே இது' என தொடங்கும் பாடல், ஆகாயத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதை சாதனா சர்கம் பாடியிருப்பார். கடைசியாக நெருப்பை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த பாடல், அய்யய்யோ 'பத்திக்கிச்சு பத்திக்கிச்சு' இந்த பாடலில் ரம்யா கிருஷ்ணன் ஆட்டம் போட்டிருப்பார். உதித் நாராயணன் மற்றும் வசுந்தரா தாஸ் இந்த பாடலை பாடியிருந்தனர். இந்த 5 பாடல்களுமே ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் பாடல்கள் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை! இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 6 படங்கள்!

click me!