கோலிவுட்.. கடந்த வாரம் வெளியாகி மாஸ் காட்டிய 4 தமிழ் படங்கள் - ஆனா வெற்றி யாருக்கு?

First Published Sep 23, 2024, 8:51 PM IST

Budget Movies : இப்பொது பெரிய பட்ஜெட் படங்களை விட, சதவிகித ரீதியாக சிறிய பட்ஜெட் படங்களே மெகா ஹிட்டாகி வருகின்றது.

Vaazhai Movie

மெகா பட்ஜெட் திரைப்படங்கள் என்றாலே அவை நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்ற ஒரு கருத்து கடந்த சில காலமாகவே அடிக்கடி பொய்த்து வருகிறது என்பது நம்மால் உணர முடிகிறது. ரசிகர்களின் சிந்தனையும், அவர்களுடைய ரசனையும் காலத்திற்கு தகுந்தார் போல மாறிக்கொண்டே வருகிறது. பட்ஜெட் என்பதை தாண்டி கதையின் சப்ஜெக்ட் எப்படி இருக்கிறது என்பதை தான் பெருவாரியான ரசிகர்கள் இப்பொது பார்க்கின்றனர். 

ஆகவே சிறிய அளவிலான நடிகர் நடிகைகள் மற்றும் எளிமையான பட்ஜெட் இருந்து பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வருகின்றது. அதற்கு மாரி செல்வராஜின் வாழை ஒரு சாட்சி. அதுமட்டுமல்ல, கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியான சில படங்கள், குறைந்த பட்ஜெட்டில், தயாரிப்பாளருக்கு நிறைவான வெற்றியை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் படத்தின் கதையே.

பாவம் பார்த்த என் தாய் வாழ்க்கையை பங்கு போட்டவர் சாவித்திரி! வீட்டுக்குள் வந்தது எப்படி? ஜெமினி மகள் பளீச்!

Nandhan Movie

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி பல திரைப்படங்கள் கோலிவுட் திரையுலகில் வெளியானது. அதில் குறிப்பாக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான "ரப்பர் பந்து", இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான "நந்தன்". சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான "கோழிப்பண்ணை செல்லதுரை" மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் வெளியான "கடைசி உலகப் போர்" ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தொடர்ச்சியாக பெற்று வருகிறது. 

இந்த நான்கு திரைப்படங்களில் "கடைசி உலகப் போர்" திரைப்படத்தைத் தவிர அனைத்து திரைப்படமும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி உலகப் போர் திரைப்படத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்கள் இணைக்கப்பட்டதால், அந்த படத்தின் பட்ஜெட் சற்று உயர்ந்த இருக்கிறது.

Latest Videos


kozhipannai chelladurai

இதில் "நந்தன்", "கோழி பண்ணை செல்லதுரை", "கடைசி உலகப் போர்" மற்றும் "லப்பர் பந்து" ஆகிய அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக தொடர்ச்சியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றாலும், தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய "ரப்பர் பந்து" திரைப்படம் பிற படங்களில் இருந்து தனித்து நிற்கிறது என்றே கூறலாம். 

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், தேவதர்ஷினி மற்றும் திவாகர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பல திரைப்படங்களின் வெளியாகி இருந்தாலும், ரப்பர் பந்து திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையும் அம்சத்தோடு, நாம் அனுதினம் பார்த்து பழகும் மனிதர்களின் வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கும் ஒரு கதையாக அமைந்திருக்கிறது.

Labbar Panthu

கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான ரப்பர் பந்து திரைப்படம், வெளியான முதல் நாளில் சுமார் 75 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில் அதை அப்படியே இரட்டிப்பாக்கும் வகையில் இரண்டாம் நாளில் சுமார் 1.7 கோடி ரூபாயை அந்த திரைப்படம் வசூல் செய்து அசத்தியிருக்கிறது. மேலும் அந்த திரைப்படம் வெளியான இன்று நான்காவது நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

லோகேஷின் LCU.. யூனிவெர்சில் இணையும் "SKவின் நாயகி?" - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

click me!