லோகேஷின் LCU.. யூனிவெர்சில் இணையும் "SKவின் நாயகி?" - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

First Published | Sep 23, 2024, 6:53 PM IST

Lokesh Kanagaraj : லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ், தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே விஷயம் இது தான்.

Director Lokesh Kanagaraj

திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பாக எந்த இயக்குனரிடமும் பணியாற்றியதில்லை என்றாலும், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே சினிமாவை கற்றுக்கொண்டு இன்று தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்றால் அது மிகையல்ல. 

"அவியல்" என்கின்ற ஒரு குறும்படம் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய அவர், கடந்த 2017ம் ஆண்டு "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தன்னுடைய முதல் திரைப்படத்திலிருந்தே, தனது அழுத்தமான கதை அம்சத்தால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றோர் கனகராஜ் என்றே கூறலாம்.

"கெனிஷா பிடியில் ஜெயம் ரவி" நீங்க உக்ரமா மாறவேண்டிய நேரம் இது - ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுத்த சுசித்ரா!

Maanagaram

கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் "கைதி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படத்திலிருந்து தான் தனது "சினிமாட்டிக் யுனிவர்ஸை" அவர் உருவாக்க தொடங்கினார் என்றால் அது மிகையல்ல. "கைதி" திரைப்படத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின் வெளியான திரைப்படம் தான் "மாஸ்டர்". தளபதி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் மிக நேர்த்தியாக அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

அந்த திரைப்படத்திற்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் "நம்மவர்" திரைப்படத்திற்கும் கூட ஒரு சிறு தொடர்பு இருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 2022ம் ஆண்டு தனது கனவு நாயகனான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து "விக்ரம்" என்கின்ற மெகா ஹிட் கமர்ஷியல் திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்தார்.

Tap to resize

Vikram movie

தனது தனித்துவமான எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படங்களுக்காக பெரிய அளவில் போற்றப்பட்ட கமல்ஹாசன், வெகு நாள்கள் கழித்து முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்த படம் விக்ரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து லோகேஷ் தனது சினிமாட்டிக் யுனிவர்சில் தளபதி விஜய் வைத்து "லியோ" என்ற திரைப்படத்தை எடுத்து மெகா ஹிட்டாக்கினார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து "கூலி" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் தனது LCU யூனிவெர்ஸ்க்குள் வருமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Benz movie

இந்த சூழலில் தான் சிவகார்த்திகேயனின் "ரெமோ" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக புகழ்பெற்ற பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் "பென்ஸ்". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடத்து வருகிறார். 

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் இந்த திரைப்படமும் லோகேஷின் LCUவோடு தொடர்புடைய கதை நான் என்றும், பிரபல நடிகை பிரியங்கா மோகன் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன ஏ.ஆர்.ரகுமான், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி காம்போவில் ஒரு பாட்டு உருவாகியிருக்கா? என்ன பாடல் அது தெரியுமா?

Latest Videos

click me!