இந்த சூழலில் தான் கெனிஷா பிரான்சிஸ் என்பவருடைய பெயர் அடிபட்டது இவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாமல் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இவரோடு இணைந்து தான் ஜெயம் ரவி வாழ உள்ளதாகவும், அதனால் தான் ஆர்த்தியை பிரிக்கிறார் என்றும் சில வதந்திகள் பரவிய நிலையில், பொதுவெளியில் அதை மறுத்து, கெனிஷா மிகவும் நல்ல பெண், அவர் ஒரு மிகச் சிறந்த எண்ணத்தோடு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். அவரோடு இணைந்து நான் செயல்பட விரும்புகிறேன், இருப்பினும் இப்படி எங்களை பற்றி கொச்சையான எந்த வார்த்தைகளையும் பேச வேண்டாம் என்று பகிரங்கமாக ஜெயம் ரவி பேசியிருந்தார்.
இந்த சூழலில் பொதுவாகவே சர்ச்சைகளை அள்ளித் தெளிக்கும் பாடகி சுசித்ரா, ஜெயம் ரவி விவகாரத்தில் அவருடைய மனைவி ஆர்த்திக்கு ஒரு அட்வைஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிய முதல் காரணமே கெனிஷா பிரான்சிஸ் தான் என்றும், ஒரு பப்பில் பாடகியாக இருப்பது மட்டுமல்லாமல் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பவர் என்றும் கூறியுள்ளார் சுசித்ரா.