தங்கலான் உட்பட 6 தமிழ் படமும் அவுட்... ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிந்தி படம் எது தெரியுமா?

First Published | Sep 23, 2024, 3:06 PM IST

2024 ஆம் ஆண்டு வெளியான படங்களில், தமிழில் மொத்தம் 6 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், லாபதா லேடீஸ் என்கிற ஒரு படம் மட்டுமே ஆஸ்கர் விருதுக்கு செல்ல உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Oscar Award 2025

ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்பது, திரையுலகில் உள்ள அனைவருக்குமே கனவு தான். இந்த கனவை நனவாகியவர் நம் தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். நடிகர் பார்த்திபன் உட்பட சிலர் ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை பலமுறை வெளிப்படையாகவே கூறி உள்ளனர். 

Best Foreign Movies

உலக அளவியில் மிக உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில்... சிறந்த வெளிநாட்டு படங்கள் என்கிற பட்டியலின் கீழ் இந்திய மொழியை சேர்ந்த படங்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், தமிழில் இருந்து தங்கலான், வாழை, ஜாமா, மகாராஜா, ஜிகர்தண்டா, கொட்டுக்காளி ஆகிய 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
 

Tap to resize

Kalki 2898 AD

இதை தவிர, தெலுங்கில் கல்கி 2898 AD, ஹனுமான், மங்களாவரம் ஆகிய மூன்று படங்களும், மலையாளத்தில் உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம், ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட் , மற்றும் ஆட்டம் ஆகிய படங்கள் இடம்பெற்றன. குறிப்பாக ஹிந்தியில், ஆர்டிகள் 370, அனிமல், லாபதா லேடீஸ் உள்ளிட்ட 12 படங்கள் இடம்பெற்றது. அதே போல் மூன்று மராத்தி மொழி படம், மற்றும் ஒரே ஒரு ஓடியா மொழி படம் என மொத்தம் 29 இந்திய படங்களில் இருந்து தற்போது லாபதா லேடீஸ் திரைப்படம் மட்டுமே ஆஸ்கர் விருதுக்கான போட்டுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Laapataa Ladies

97-ஆவது அகடமி விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. லாபடா லேடீஸ் திரைப்படத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ் இயக்கி இருந்தார். இந்த படம் இந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு... வசூலையும் வாரி குவித்தது. காமெடி ட்ராமாவாக பெண்களுக்கான மெசஜையும் இந்த படத்தில் பதிவு செய்திருந்தார் கிரண் ராவ். நிதன்ஷி கோயல், ஸ்பர்ஸ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரன்தா, அபய் துபேய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை அமீர் கான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!