
தமிழில் 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கி இருந்த இந்த படத்தில் கமல் - ரஜினிகாந்த் ஆகிய இருவருமே நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ஸ்ரீதேவிக்கு 13- வயது மட்டுமே நிரம்பி இருந்தது. தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி... பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து வெற்றிவாகை சூடியவர்.
பொதுவாக தென்னிந்திய திரையுலகில் இருந்து, பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆகும் நடிகர் - நடிகைகள் நிலைத்து நிற்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சமீப காலமாக டாமினேஷன் குறைந்திருந்தலும்.. ஸ்ரீதேவி ஹீரோயினாக நடித்த காலங்களில் பாஷியலிட்டி, டாமினேஷன் போன்றவை அதிகமாகவே இருந்தது. ஆனால் அவற்றை தன்னுடைய திறமையால் தவிடுபொடியாக்கி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை தனதாக்கி கொண்டவர் ஸ்ரீதேவி. இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளார்.
மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை! இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 6 படங்கள்!
தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக தமிழ் நாடு அரசு விருது, ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது, கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது, நான்கு பிலிம்பேர் விருது உற்பட ஏராளமான விருதுகளை வாங்கியுள்ள ஸ்ரீதேவிக்கு, கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.
ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை - குடும்பம் என வாழ்ந்து வந்த, பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதல் வயப்பட்ட ஸ்ரீதேவி, ஜான்வி கபூர் 4 மாதம் வயற்றில் இருந்த போது... போனி கபூரை 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்த பின்னர் நடிப்பில் இருந்து சில காலம் விலகியே இருந்த ஸ்ரீதேவி... தன்னுடைய மகள்கள் பள்ளிக்கு சென்ற பின்னரே சில படங்களில் தலை காட்ட துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த இங்கிலீஷ் - விக்கிலீஸ், படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித் கேமியோ ரோலில் நடித்திருப்பார். தமிழில் நடிகர் விஜயுடன் புலி படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்த நிலையில் இந்த படம் படு தோல்வியை தழுவியது.
நடிகை ஸ்ரீதேவியிடம் பலரும் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம் என்றால் அது அவருடைய பஞ்சுவாலிட்டி மற்றும் டெடிகேஷன் தான். இதனை பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களில் பேட்டிகளில் கூறி உள்ளனர். அதே போல் ஸ்ரீதேவி தமிழில் மற்ற நடிகர்களை விட ரஜினி - கமல்ஹாசனுடன் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளார். இதன் காரணமாகவே 80-களில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாக வதந்திகள் கூட வந்து ஓய்ந்தது. கமல் ஹாசன் ஸ்ரீதேவியுடன் சேர்ந்து நடிக்கும் போது காதல் மன்னன் என்றாலும், நிஜத்தில் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதால், ஸ்ரீதேவியின் தாயார் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கமல்ஹாசனிடம் கேட்ட போது கூட, அதனை கமல் மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சரி ஸ்ரீதேவி, உடைந்த காலோடு... மிகவும் டெடிகேஷனுடன் ரஜினிகாந்துடன் ரொமான்டிக் பாடலில் நடித்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?...
இயக்குனர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தர்ம யுத்தம்'. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தேங்காய் ஸ்ரீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. "இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்தை பார்க்க, ஸ்ரீ தேவி சுவர் ஏறி குதித்து உள்ளே வருவது போல் ஒரு காட்சி இருக்கும்". அந்த காட்சியில் நடித்த போது, ஒரு கல் மீது ஸ்ரீதேவி கால் வைத்து விட்டதால், கால் இடறி கீழே விழுந்த வேகத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ரஜினியுடன் ரொமான்டி பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே மீதம் இருந்ததாம். படப்பிடிப்பை ஒரு குறைந்த பட்சம் ஒரு வாரம் தள்ளி போட்டால் கூட, ஸ்ரீதேவிக்கு கால்சீட் பிரச்சனை ஏற்படுவது மட்டும் இன்றி... தயாரிப்பாளரும் நஷ்டமடையும் சூழல் நிலவியதால், 'ஆயாக கங்கை' என்கிற பாடலை கீழே அமர்ந்தபடியே நடித்து கொடுத்தார் ஸ்ரீதேவி. இதில் ஒரு சில சீன்களில் ஸ்ரீதேவி எழுந்து நிற்பது போல் இருந்தாலும்... அந்த காட்சிகளில் ரஜினியின் உதவியுடன் தான் நிற்பார் என்பது நீங்கள் கூர்ந்து பார்த்தால் தெரியும். இப்படியே வலியை சமாளித்து இந்த படத்தையும் மூன்றே நாட்களில் முடித்து கொடுத்து விட்டு தான் கிளம்பினாராம் ஸ்ரீதேவி. இதில் இருந்தே ஸ்ரீதேவி தன்னுடைய டெடிகேஷன் லெவலை வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.