மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை! இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 6 படங்கள்!

First Published | Sep 23, 2024, 12:11 PM IST

திரைப்பட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் திரையரங்கில் மொத்தம் 6 படங்கள் வெளியாக உள்ளது. அவை எந்தெந்த படங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
 

Meiyazhagan Movie

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம், 3 வாரங்களை கடந்து ஒரு சில திரையரங்குகளில் தலைகாட்டி வந்தாலும், அதை மொத்தமாக வாஷ் அவுட் செய்யும் விதமாக இந்த வாரம் மொத்தம் 6 படங்கள் வெளியாக உள்ளது. அந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Karthi Meiyazhagan Released 27th Sep

மெய்யழகன்:

நடிகர் கார்த்தி, 'விருமன்' படத்திற்கு பின்னர் தன்னுடைய அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடித்துள்ள 'மெய்யழகன்' திரைப்படம் செப்டெம்பர் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை, 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தன்னுடைய இரண்டாவது படமாக இயக்கி உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்தி கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் மாமன் - மச்சான் இடையே உள்ள உறவின் ஆழத்தை பேசும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tap to resize

Devara:

தேவரா: 

RRR பட நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது, 'தேவரா'. தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானாலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் கொரட்டலா சிவா எழுதி - இயக்கியுள்ள இப்படத்தில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்விக்கு இதுவே முதல் தென்னிந்திய மொழி திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளனர் சுதாகர் மிக்கிலினி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா. இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Petta Rap:

பேட்ட ராப்:

நடிகர் பிரபு தேவா நடிப்பில், இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் 'பேட்ட ராப்'. எஸ்.ஜே.சினு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடிக்க, இரண்டாவது நாயகியாக சன்னி லியோன் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான்ஸை மையமாக வைத்து காமெடி மற்றும் ரொமாண்டிக் ஜார்னரில் இந்த படம் எடுக்கப்பட்டுளள்ளது.

Sattam En Kaiyil:

சட்டம் என் கையில்

இயக்குனர் சாச்சி இயக்கத்தில், காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'சட்டம் என் கையில்'. இந்த படத்தில் சதீஷ் முதல் முறையாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். ஜோன்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரமே வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், சில காரணங்களால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இந்த வாரம் அதாவது செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீசாகிறது.
 

Hitler:

ஹிட்லர்:

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படம், செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் தனா இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும் கெளதம் வாசுதேவ் மேனன், சரண் ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, சங்க தமிழன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

Dhil Raja:

தில் ராஜா:

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'தில் ராஜா'. நடிகை செரின் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார். அதே போல் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞருக்கும் - பணக்காரருக்கு நடக்கும் போராட்டமே இந்த படம் என கூறப்படுகிறது . இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 

Latest Videos

click me!