பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை சினிமாவுக்காக தூக்கியெறிந்த நடிகைகளும்... அவர்களின் ஒரிஜினல் பெயர்களும்!!

First Published | Sep 23, 2024, 11:46 AM IST

Tamil Cinema Actress Original Names : சினிமாவில் கவர்ச்சியான பெயர்களுடன் வலம் வரும் நடிகைகள் பலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்றி போலியான பெயர்களுடன் நடித்து வருகின்றனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

Original Names of Tamil Cinema Actress

ஒருவருக்கு அடையாளமாக இருப்பதே அவர்களின் பெயர் தான். சினிமா நடிகைகளின் பெயர்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அவர்களின் தனித்துவமான பெயரை காப்பியடித்து ரசிகர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் பெயர் சூட்டுவது உண்டு. ஆனால் பல முன்னணி சினிமா நடிகைகளின் கவர்ச்சிகரமான பெயர்களே ஒரிஜினல் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் நிஜம். சினிமாவுக்காக அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். அப்படி பெயரை மாற்றிக்கொண்ட தமிழ் சினிமா நடிகைகளின் ஒரிஜினல் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.

Nayanthara Original Name

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது ஒரிஜினல் பெயர் டயானா மரியம் குரியன். இவர் சினிமாவில் அறிமுகமாகும் போது மலையாள இயக்குனர் ஒருவர் நயன்தாரா என மாற்றிவிட்டார். அந்த பெயர் தற்போது அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது. அதேபோல் தென்னிந்திய திரையுலகில் டாப் நாயகியாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டியும் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்டார். அவரின் ஒரிஜினல் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. திரையுலகினர் பலரும் அவரை ஸ்வீட்டி என்று தான் அழைப்பார்கள்.

Tap to resize

Bharathiraja changed heroines names

இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களுக்கெல்லாம் பெயர்களை மாற்றி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதுவும் R என்கிற பெயரில் தான் நடிகைகளுக்கு பெயரிடுவார். அந்த வகையில் நடிகைகள் ராதா, ரேவதி, ரேகா போன்றவர்களுக்கு பெயரை மாற்றியது பாரதிராஜா தான். இந்த நடிகைகளில் ராதாவின் ஒரிஜினல் பெயர் உதய சந்திரிகா, ரேவதியின் நிஜ பெயர் ஆஷா, ரேகாவின் ரியல் பெயர் சுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நீ தான் பாடணும்; ஒற்றைக்காலில் நின்ற MGR! SPB குரலுக்காக 2 மாதம் காத்திருந்து கம்போஸ் செய்யப்பட்ட பாட்டு

Sneha Original Name

புன்னகை அரசி சினேகாவும் சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார். அவரின் ஒரிஜினல் பெயர் சுஹாசினி. அதேபோல் நடிகை நதியா, சரீனா மொய்டு என்கிற தனது பெயரை சினிமாவுக்காக நதியா என மாற்றிக்கொண்டார். நடிகை ஊர்வசியின் ஒரிஜினல் பெயர் கவிதா ரஞ்சினி அவரும் சினிமாவுக்காக பெயரை மாற்றினார். அதேபோல் தொடையழகி ரம்பாவின் ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமி அவர் சினிமாவுக்காக தன் பெயரை ரம்பா என ஸ்டைலாக மாற்றிக்கொண்டார்.

Anjali Original Name

நடிகை அஞ்சலியும் சினிமாவுக்காக பெயரை மாற்றிவிட்டார். இவரின் நிஜ பெயர் பாலதிரிபுரசுந்தரி, அந்த பெயர் சினிமாவுக்கு செட் ஆகாது என்பதால் அதை மாற்றி அஞ்சலி என வைத்துக்கொண்டார். நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் ஒரிஜினல் பெயர் நஹத் கான். அஜித்துடன் அசல் படத்தில் நடித்த நடிகை பாவனாவின் நிஜ பெயர் கார்த்திகா மேனன். அதேபோல் நடிகை ஸ்ருதி ஹாசனின் ஒரிஜினல் பெயர் ஸ்ருதி ராஜலட்சுமி ஹாசன், அதை சுருக்கி அவர் ஸ்ருதிஹாசன் என வைத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்! ஆர்த்தியின் கஸ்டடியில் இருக்கும் மகன்கள்... மீட்க போராடும் ஜெயம் ரவி

Latest Videos

click me!